ஹனுமான் காரி கோயிலின் மஹந்த் கன்ஹையா தாஸ் அயோத்தியில் உள்ள சரன்பதுக்கா கோவிலில் உள்ள கோசாலையில் இறந்து கிடந்தார். அடையாளம் தெரியாத நபர்கள் அடித்து தாக்கியதால் அவர் கொல்லப்பட்டுள்ளார். அதனால், கோவில் நகரமான அயோத்தியில் பதற்றம் நிலவுகிறது.
மூத்த போலீஸ் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பல நாக சாதுக்களும் அவர்களைப் பின்பற்றும் பக்தர்களும் சரண்படுகா கோவிலில் கூடி இந்தக் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ALSO READ | உத்திராகண்டில் வேகமாக பரவும் காட்டுத் தீயை அணைக்க போராடும் NDRF, தீயணைப்பு படை
அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க கூடுதல் போலீஸ் படை நிறுத்தப்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டு வி.பி. சிங், தனிப்பட்ட பகைதான் சாதுவின் கொலைக்குப் பின்னால் இருக்கும் காரணமாக தெரிகிறது எனக் கூறினார்.
குற்றம் நடந்த இடத்திலிருந்து கைரேகைகளை சேகரிக்க தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
கொலைக்கு பின்னால் சாத்தியமான அனைத்து கோணங்களிலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. குற்றவாளிகளை விரைவில் பிடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மஹந்த் கன்ஹையா தாஸ் என்பவருக்கு கோலு தாஸ் என்ற சஷிகாந்த் தாஸுடன் சொத்து தகராறு இருந்ததாக, அவரை வழிநத்தும் ரமாயுஜ் என்பவர் கூறுகிறார். இது தொடர்பான வழக்கு உள்ளூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. விசாரணைக்காக கோலு தாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ALSO READ | அஸ்ஸாமில் பரபரப்பை ஏற்படுத்திய 16 அடி நீளம் 20 கிலோ எடையுள்ள ராஜ நாகம்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR