டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ வேட் பிரகாஷ் சதீஷ் இன்று பா.ஜ.காவில் இணைந்தார்.
இதுகுறித்து வேட் பிரகாஷ் சதீஷ் கூறியதாவது:-
ஆம் ஆத்மி கட்சியில் இருந்தபோது மூச்சுத்திணறியது போல நான் உணர்ந்தேன். சட்டசபைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை ஆம் ஆத்மி நிறைவேற்றவில்லை. அர்விந்த் கெஜ்ரிவால் எப்பொழுதும் பிரதமர் மோடியை குறைக்கூறி கொண்டு இருப்பது தான் வேலை. அக்கட்சியில் உள்ள 30-35 எம்.எல்.ஏ-க்களும் கட்சித்தலைமையின் கீழ் மகிழ்ச்சியின்றி உள்ளனர்.
AAP MLA Ved Prakash from Bawana has joined BJP in presence of @ManojTiwariMP , @ShyamSJaju @Gupta_vijender pic.twitter.com/6ENmhvZF6W
— BJP Delhi (@BJP4Delhi) March 27, 2017
பாவனா தொகுதியில் கடந்த 2 வருடங்களாக எந்தவொரு வேலையும் நடைபெறவில்லை. இதனால் எனது தொகுதி மக்கள் பெரும் மனக்குறையுடன் உள்ளனர்.
சபாநாயகரை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுக்க செல்கிறேன். பா.ஜ.காவில் இணைந்து பிரதமர் மோடியின் தலைமையில் பணியாற்ற விரும்புகிறேன் என கூறியுள்ளார்.
டெல்லியில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sh. Ved Prakash ji MLA of @AamAadmiParty today joined @BJP4Delhi. He was fed up of corruption and nepotism within AAP #CorruptAAP pic.twitter.com/bsjoOEwjHc
— Manoj Tiwari (@ManojTiwariMP) March 27, 2017