முத்தலாக் மசோதா முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் நேரடியாக தலையிடுவதால், இந்த மசோதா தேவையில்லை என அதிமுக எம்பி அன்வர் ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்!
மக்களவையில் இன்று முத்தலாக் மசோதா மீதான விவாதம் நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக எம்பி அன்வர் ராஜா இதுகுறித்து தெரிவிக்கையில்...
"இஸ்லாமிய இளைஞர்களுக்கு எதிரான இந்த முத்தலாக் சட்டத்தை அதிமுக கடுமையாக எதிர்க்கிறது. முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் நேரடியாக தலையிடும் இந்த மசோதாவை நிராகரிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்
Anwar Raja, AIADMK MP on #TripleTalaqBill: The Bill is against the Muslim community. Our party will oppose the Bill, we are against it, that is our stand. pic.twitter.com/ft9d9SMV48
— ANI (@ANI) December 27, 2018
முத்தலாக் சட்டம் காட்டுமிராண்டித் தனமாக உள்ளது, உணர்ச்சிகரமான விஷயத்தில் மத்திய அரசு கண்மூடித்தனமாக செயல்படுவுது ஏற்புடையது அல்ல.
ஷரியத் சட்டம் என்பது மனிதர் உருவாக்கியது அல்ல; இறைவனால் அனுப்பப்பட்டது. ஆகையால் முத்தலாக் சட்டத்தை இஸ்லாமியர்களுக்கு எதிரானது என பார்க்க இயலாது; இறைவனுக்கு எதிரானது என்றே பார்க்கவேண்டும்.
இந்த மசோதாவை கொண்டு வருவதால் மத்திய அரசு என்ன மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது? வெறும் கண்துடைப்புக்காகவே மத்திய அரசு இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளது. தற்போதைய வடிவில் இந்த மசோதாவை நிறைவேற்றக்கூடாது. இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும். எனவே, இந்த மசோதாவை பாராளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும்.
மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பால் மதிப்பை இழந்தார்கள், GST-யால் செல்வாக்கை இழந்தார்கள், இதன் காரணமாகவே 5 மாநில தேர்தலில் தோல்வி அடைந்தார்கள். இந்நிலையில் தற்போது முத்தலாக் மசோதாவை கொண்டுவந்தால் அதற்கான விளைவினையும் பாஜக எதிர்நோக்க வேண்டியிருக்கும்" என தனது வாதத்தினை முன்வைத்தார்.