நேற்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி பல புதிய சலுகைகளை அறிவித்தார்.
தொலைக்காட்சியில் அவர் கூறியதாவது:-
உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையால் மக்களுக்கு பெரும் கஷ்டங்கள் ஏற்பட்டதை நான் அறிந்துள்ளேன். ஆனால் 125 கோடி மக்களும் நேர்மையாக வும், உண்மையாகவும் இருந்து அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்து வருவதுக்கு நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
பணம் எடுப்பதற்காக வங்கிகளிலும், ஏடிஎம் மையங்களின் முன்பு மக்கள் வரிசையில் நின்றபோதிலும் ஊழல், கருப்பு பணம், கள்ளநோட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து அவர்கள் பின்வா ங்க தயாராக இல்லை என்றும், தனது உரையின் போது அவர் குறிப்பிட்டார். ஊழலையும் கருப்பு பணத்தையும் ஒழிப்பதற்கான நடவடிக்கையில் அரசியல் கட்சிகளும் ஈடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கிராமப்புறங்களில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மருத்துவ செலவுக்காக ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இந்த தொகை அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் 8-ம் தேதி புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.