மும்பையில் சமயோஜிதமாக செயல்பட்டு பெரும் விபத்தை தடுத்த ரயில் ஓட்டுநருக்கு மத்திய அரசு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. நேற்று இந்த கனமழை காரணமாக மும்பை அந்தேரி பகுதியில் உள்ள மேம்பாலத்தின் பக்கவாட்டு பகுதி இடித்து கீழே உள்ள ரயில் பாதையில் மின்னழுத்த கம்பிகள் அறுந்து விழுந்தன.
மின்சார கம்பிகள் அறுந்து விழுந்த நேரத்தில், அந்தேரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயிலை ஓட்டி வந்த ரயில் ஓட்டுநருர் ஒருவர் சமயோஜிதமாக செயல்பட்டு, ரயிலை உடனே நிறுத்தினார். இதனால், பெரும் விபத்தை தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்ட அந்த ரயில் ஓட்டுநருக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார்.