Money For Rice: கர்நாடகாவில் அன்ன பாக்யா திட்டத்தில், மக்களுக்கு அரிசி கொடுக்கப்படுமா என்ற கேள்விகளுக்கு, இல்லை என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தெளிவாக தெரிவித்துவிட்டார். கர்நாடக மாநில தேர்தலின்போது, காங்கிரஸ் வெற்றி பெற்றால் மக்களுக்கு, அன்ன பாக்யா திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இலவச அரிசி வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்திருந்தது காங்கிரஸ் கட்சி.
ஜூலை 10 முதல் தனது அரசு இலவச அரிசி வழங்குவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, அரிசிக்கு பதிலாக பணத்தை விநியோகிக்கப் போவதாக கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
We will start distributing money in place of free rice promised under the Anna Bhagya Scheme from July 10: Karnataka CM Siddaramaiah pic.twitter.com/Uw40p8BYBj
— ANI (@ANI) July 1, 2023
மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசு, அதிக அளவிலான அரிசியை கொள்முதல் செய்வதில் சிக்கலை எதிர்கொள்வதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை முதல் ஊதியத்தில் பம்பர் ஏற்றம்... நாளை வரும் குட் நியூஸ்
எனவே, அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வாக்குறுதி அளித்தபடி அரிசி வழங்குவதற்கு பதிலாக, ஒரு கிலோ அரிசிக்கு ரூ.34 வீதம் மக்களுக்கு அரசு ரொக்கமாக வழங்கப்படும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இலவச அரிசிக்கு பதிலாக ஜூலை 10-ம் தேதி முதல் பணம் விநியோகிக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று (2023, ஜூலை 1, சனிக்கிழமை) தெரிவித்தார்.
மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் அரசு பெரிய அளவில் கொள்முதல் செய்வதில் சிக்கலை எதிர்கொள்வதாகக் கூறப்பட்ட நிலையில், தேர்தல் வாக்குறுதியை அரசு எவ்வாறு நிறைவேற்றும் என சந்தேகங்களும் கேள்விகலும் எழுப்பப்பட்டன.
தற்போது எதிர்கட்சிகளின் வாயை மூடும் வகையில், அரிசிக்கு பதிலாக, அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வாக்குறுதி அளித்தபடி பணம் விநியோகிப்பதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஒரு கிலோ அரிசிக்கு ரூ.34 வீதம் ரொக்கமாக வழங்கப்படும் என்ற செய்தி, மக்களுக்கு நிம்மதியைத் தரும்.
மேலும் படிக்க | கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவரா? அக்டோபர் வரை கவலையில்லை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ