புது தில்லி: தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் பொது மக்களின் பிரச்சனைகளை பல வகைகளில் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் விண்ணை எட்டியுள்ளன. விலைவாசி உயர்வால் மக்கள் படும் அவதியை கருத்தில் கொண்டு, பண்டிகை காலங்களில் மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் (Sunflower oil) மீதான விவசாய வரி (Agri Cess) மற்றும் சுங்க வரியை (Custom Duty) அரசாங்கம் குறைத்துள்ளது. முன்னதாக, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் எண்ணெய் மற்றும் எண்ணெய் வித்துகளுக்கு இருப்பு வரம்புகளை விதிக்க உத்தரவு பிறப்பித்தது. இருப்பு வரம்பு மார்ச் 31, 2022 வரை பொருந்தும். இது குறித்த உத்தரவை பிறப்பித்து அதை கண்டிப்பாக பின்பற்றுமாறு மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி வரி குறைப்பு
அரசாங்கத்தின் இந்த முடிவின்படி, கச்சா பாமாயில் மீதான வரி 8.25% (முன்பு 24.75%), RBD பாமோலீன் 19.25 %(முன்பு 35.75%), RBD பாமாயில் 19.25 (முன்பு 35.75), கச்சா சோயா எண்ணெய் (Oil) 5.5 (முன்பு 24.75), ரிஃபைண்டு சோயா எண்ணெய் 19.5 (முன்பு 35.75), கச்சா சூரியகாந்தி எண்ணெய் 5.5 (முன்பு 24.75) மற்றும் ரிஃபைண்டு சூரியகாந்தி எண்ணெய் 19.25 (முன்பு 35.75) ஆக குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பு காரணமாக, CPO இன் விலை ரூ .14,114.27, RBD ரூ .14526.45, சோயா எண்ணெய் டன்னுக்கு ரூ. 191351 .95 குறைந்துள்ளது. அரசின் இந்த முடிவுக்குப் பிறகு, சமையல் எண்ணெய்களில் ரூ .15 குறைக்கப்படலாம்.
ALSO READ: விட்டமின் A, D நிறைந்த எண்ணெயை மட்டும் விற்பனை செய்ய FSSAI திட்டம்!!
அரசாங்கத்தின் இந்த முடிவு எப்போது நடைமுறைக்கு வரும்
மத்திய மறைமுக வரிகள் (Tax) மற்றும் சுங்க வாரியம் (CBIC), தனது அறிவிப்பில் அக்டோபர் 14 முதல் வரி குறைப்பு நடைமுறைக்கு வரும் என்றும் மார்ச் 31, 2022 வரை பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது.
கடந்த மாதமும் இறக்குமதி வரி குறைக்கப்பட்டது
கடந்த மாதம், செப்டம்பர் 11 ம் தேதி, பாமாயில், சோயா எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. கச்சா பாமாயில் மீதான அடிப்படை இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டது. கச்சா சோயா எண்ணெய் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான இறக்குமதி வரியும் 7.5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
ALSO READ: எகிறியது எண்ணெய் மற்றும் பருப்பு விலை! குடும்பஸ்தர்களுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR