அகமதாபாத்: குஜராத்தின் வல்சாத் பகுதியில் 'பிபோர்ஜாய்' புயலின் தாக்கம் தொடங்கிவிட்டது. கடல் அலைகள் கரையைத் தாக்குகின்றன. இந்த அலைகள் இன்னும் சாதாரணமாகத் தோன்றினாலும். ஆனால் அடுத்த 2 முதல் 3 நாட்களில் இந்த அலைகள் வலிமையான வடிவத்தை எடுக்கலாம். மும்பை முதல் கேரளா வரையிலான கடற்கரையோரம் பலத்த காற்று வீசி வருகிறது.
நடுக்கடலில் இருந்து உயரமான அலைகள் எழுந்து கரையை தாக்குவதால், கடலோர பகுதிகளில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் என்டிஆர்எஃப் மற்றும் எஸ்டிஆர்எஃப் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பிபார்ஜாய், பைபர்ஜாய் என்றும் அழைக்கப்படும் பிபோர்ஜாய் சூறாவளியின் தாக்கம் சவுராஷ்டிரா, கட்ச் ஆகிய பகுதிகளில் ஜூன் 13, 14 மற்றும் 15 வரை இருக்கும். இது ஜூன் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வடக்கு குஜராத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். பிபர்ஜாய் புயல் தொடர்பான நிலைமையை ஆய்வு செய்ய மூத்த அதிகாரிகளுடன் முன்னாள் குஜராத் முதலமைச்சரும், இந்நாள் இந்திய பிரதமருமான நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.
#WATCH गुजरात:चक्रवाती तूफान बिपरजोय के कारण वलसाड में तेज हवा के साथ ऊंची लहरे उठती हुई दिखी। pic.twitter.com/DN5OXBiyKb
— ANI_HindiNews (@AHindinews) June 12, 2023
அதிகரிக்கும் புயலின் கோர அச்சுறுத்தல்
அரபிக்கடலில் அபாயத்தை அதிகரித்து வருகிறது. பிபர்ஜாய் புயலின் வடக்குப் பகுதி குஜராத்தின் கடலோரப் பகுதிகளைத் தாக்கும் என்பதால், புயலின் மிகப்பெரிய அச்சுறுத்தல் குஜராத் மாநிலத்திற்கே உள்ளது என்பதால், தனது சொந்த மாநிலத்தின் மீது அவர் கவனம் செலுத்துகிறார்.
இருப்பினும், புயல் தாக்க இன்னும் 72 மணி நேரம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வந்த பெரும் புயல்களை இந்தியா சரியான விதத்தில் எதிர்கொண்டுள்ளது என்றாலும், இந்த புயலுக்கு முந்தைய நிலைகள் பெரும் ஆபத்தை சுட்டிக்காட்டுகின்றன. முந்தைய புயல்களை திறமையாக கையாண்டதுபோலவே, பிபோர்ஜாய் புயலையும் சரியான முறையில் எதிர்கொள்ள முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | பிபார்ஜாய் 'மிகக் கடுமையான சூறாவளி புயலாக' மாறும்! IMD எச்சரிக்கை!
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு
பிபார்ஜாய் புயல் மிகவும் ஆபத்தான வகை புயலாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பிபர்ஜோய் புயல் வடக்கு திசையில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருவதாகவும், ஜூன் 14-ம் தேதிக்கு பிறகு அதன் திசை மாறும் என்றும் இதுகுறித்து வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்தார்.
ஜூன் 15 பிற்பகலில், சௌராஷ்டிரா, கட்ச் மற்றும் பாகிஸ்தானின் கடற்கரையை மணிக்கு 125-135 கிமீ வேகத்தில் மிகக் கடுமையான சூறாவளி புயல் தாக்கும். ஜூன் 14-15 தேதிகளில் சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் கனமழை பெய்யும்.
#WATCH महाराष्ट्र: चक्रवाती तूफान बिपरजोय के कारण मुंबई में मरीन ड्राइव पर ऊंची लहरें उठती देखी गईं।#BiparjoyCyclone pic.twitter.com/vAwtH6LPZX
— ANI_HindiNews (@AHindinews) June 12, 2023
இன்னும் கடற்கரையை விட்டு தொலைவில் உள்ள பிபோர்ஜாய் புயலின் தாக்கம் கடற்கரையில் தெரியும்போது நிலைம எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. தற்போது புயல் குஜராத்தில் போர்பந்தரில் இருந்து 320 கிமீ தொலைவிலும், குஜராத்தின் துவாரகாவிலிருந்து 360 கிமீ தொலைவிலும் உள்ளது. சூறாவளி புயல் தற்போது, மணிக்கு 9 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது.அது முன்னேறும் போது, அதன் வடிவம் ஆபத்தானதாக மாறி, அதன் தாக்கம் கடல் கடற்கரையிலும் தெரியும்.
பிபோர்ஜாயின் தாக்கம் மும்பையிலும் தெரிகிறது
மும்பையில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் பைபர்ஜாய் கடந்து செல்கிறது, இருப்பினும் அதன் விளைவு மும்பையில் தெரியும். மும்பை கடற்கரை பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது... கடலில் உயரமான அலைகள் எழுகின்றன.
மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியா சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிகிறது. அங்கு, 5 முதல் 6 அடி உயர அலைகள் கரையை தாக்குவதால், புயலுக்கு பயந்து, சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் கடலில் இருந்து விலகி இருக்குமாறு கூறப்பட்டாலும், உயிரைப் பணயம் வைத்து மக்கள் கடற்கரைக்கு வந்துள்ளனர்.
மேலும் படிக்க | நீர்த்துப் போகும் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம்! பிரிஜ் பூஷன் தவறு செய்யவில்லை
மும்பையில் உள்ள மரைன் டிரைவிலும் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது. கடலில் பேரலைகள் எழுவது அதிகரித்ததால், மக்கள் கடலில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
புயல் காரணமாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை காலையிலும் மும்பையில் மழை பெய்தது. அடுத்த 48 மணி நேரத்திற்கு மும்பை மற்றும் மகாராஷ்டிரா கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பையில் பெய்த மழைக்கு பிபர்ஜோய் தான் காரணம் என்றாலும், குஜராத் மாநிலம் பிபர்ஜோயினால் அதிகம் பாதிக்கப்படலாம்.
கராச்சியையும் புயல் தாக்கும்
இந்த புயல் பாகிஸ்தானின் கராச்சியையும் தாக்கும். அதாவது இந்த புயல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த புயல் ஜூன் 15-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் கடற்கரையை தாக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கம் ஜூன் 16-17 தேதிகளில் தெரியும். மாநிலத்தின் ஜோத்பூர், உதய்பூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பசையால் பறிபோன பார்வை... சொட்டு மருத்து போடும் கவனமாக இருங்க மக்களே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ