Border tension: எல்லைக்கு அதிக துருப்புக்கள் அனுப்புவதை நிறுத்த இந்தியா-சீனா முடிவு!!

கிழக்கு லடாக் எல்லையில் நிலவும் (LAC) பதற்றமான சூழலை தணிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, அந்தப் பகுதிக்கு கூடுதல் படைகளை அனுப்புவதில்லை என்று இந்திய-சீன முடிவு செய்துள்ளது..!

Last Updated : Sep 23, 2020, 07:23 AM IST
Border tension: எல்லைக்கு அதிக துருப்புக்கள் அனுப்புவதை நிறுத்த இந்தியா-சீனா முடிவு!! title=

கிழக்கு லடாக் எல்லையில் நிலவும் (LAC) பதற்றமான சூழலை தணிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக, அந்தப் பகுதிக்கு கூடுதல் படைகளை அனுப்புவதில்லை என்று இந்திய-சீன முடிவு செய்துள்ளது..!

லடாக் எல்லைப்பகுதியில் (LAC) கடந்த சில மாதங்களாகவே பதற்றம் நிலவி வருகிறது. அமைதி பேச்சுவார்த்தை மூலமாகவே எல்லைப் பிரச்சினையை தீர்க்க விரும்புவதாக இருநாடுகளும் கூறி வருகின்றன. இதுவரை இந்தியா மற்றும் சீனா (India-China border) ராணுவ தளபதிகள் இடையே ஐந்து கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ள நிலையில், கடந்த இரு தினங்களாக ஆறாம் கட்ட பேச்சுவார்த்தையும் (sixth round of Military Commander-Level Meeting) நடைபெற்றது.

சீன எல்லைக்குள் இருக்கும் மோல்டோ பகுதியில் காலை 9 மணிக்கு இருதரப்பு ராணுவ பேச்சுவார்த்தை தொடங்கியது. இந்திய ராணுவ ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான இந்தியக் குழுவும், சீன ராணுவத்தின் மேஜர் ஜெனரல் லின் லியு தலைமையிலான இந்திய குழுவும் பல மணிநேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 

இதை தொடர்ந்து, அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடா்பாக இந்திய-சீன ராணுவங்களின் சாா்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... "கிழக்கு லடாக் எல்லையில் பதற்றத்தை தணிக்கும் வகையில் அங்கு கூடுதல் படைகளை அனுப்புவதில்லை என்று இந்திய-சீன ராணுவங்கள் முடிவு செய்துள்ளது. அதேபோல் எல்லைப் பகுதியின் தற்போதைய கள நிலவரத்தை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்றும், எல்லைச் சூழலை மேலும் சிக்கலாக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்வதில்லை என இரு தரப்பும் முடிவு செய்துள்ளனர்.

ALSO READ | நவம்பர் 1 முதல் முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கும்: மத்திய அரசு!

இதை தொடர்ந்து, கள அடிப்படையிலான தொடா்புகளை வலுப்படுத்தவும், இரு நாட்டு தலைவா்கள் சந்திப்பின் போது ஒருமித்த வகையில் எட்டப்பட்ட முக்கியமான முடிவுகளை அமல்படுத்தவும் இந்தியா மற்றும் சீன ராணுவங்கள் ஒப்புக்கொண்டன. எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் நிலையான சூழலை ஏற்படுத்துவது தொடா்பான தங்களது கருத்துகளை இரு நாட்டு ராணுவங்களும் பகிா்ந்துகொண்டன.

களத்தில் உள்ள பிரச்னைகளுக்கு முறையான தீா்வை காண இயன்ற நடவடிக்கைகள் எடுக்கவும், எல்லையில் அமைதியை கூட்டாக உறுதிப்படுத்தவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. அத்துடன், ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதிகள் இடையேயான 7 ஆம் கட்ட பேச்சுவாா்த்தையை விரைந்து நடத்தவும் ஒப்புக்கொண்டன" என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 4 மாதங்களுக்கு மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரா்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் உயிரிழப்பும் நிகழ்ந்ததால் இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவில் விரிசல் ஏற்பட்டது. அதையடுத்து, எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இரு நாட்டு ராணுவங்கள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. 

Trending News