மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2024 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் நிதியமைச்சரால் சமர்ப்பிக்கப்படும் விரிவான பட்ஜெட், முதலீடுகள், உற்பத்தி மற்றும் கிராமப்புற பொருளாதாரத்திற்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கும். பட்ஜெட் இந்தியாவின் நடுத்தர வர்க்கம், விவசாயிகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிக்கலாம். பல்வேறு துறைகளின் சமீபத்திய பட்ஜெட் 2023 எதிர்பார்ப்புகளுக்கான சில முக்கிய அம்சங்கள் மீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தனிப்பட்ட வரி செலுத்துவோர், நேரடி வரி வசூலில் முக்கிய பிரிவாக இருக்கும் நிலையில், அதிக வரிச் சலுகைகள் வழங்கபப்டலாம் என இந்த ஆண்டு பட்ஜெட்டில் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். இந்த நம்பிக்கைகளில் ஒன்று நிலையான விலக்கு வரம்பை 50,000 இலிருந்து 1 லட்சமாக உயர்த்துவது.
2019 நிதியாண்டின் பட்ஜெட் அடுத்த 25 ஆண்டுகளுக்கான பாதையை அமைத்துக் கொடுக்கும் என்று FM சீதாராமனின் அறிவிப்புக்கு இணங்க, மக்களின் தேவைகளை மையமாகக் கொண்ட நடவடிக்கைகளை உள்ளடக்கியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 யூனியன் பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொள்கை நடவடிக்கைகள் மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை ஊக்குவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் உண்மையான நிதி ஒருங்கிணைப்பை நோக்கிய பாதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், சராசரி நபருக்கு பட்ஜெட்டில் இருந்து ஒரு முக்கிய எதிர்பார்ப்பு உள்ளது அது வருமான வரி செலுத்தும் சுமை குறைப்பு. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி அடுக்குகளை மாற்றுவார் என்று சம்பளம் பெறும் பெரும்பாலான வரி செலுத்துவோர் நம்புகின்றனர்.
மேலும் படிக்க | Budget 2023: மாத சம்பளம் பெரும் நபரா நீங்கள்? பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்பு, விவரம் இதோ
பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா போன்ற கால்நடை காப்பீட்டுத் திட்டம் பட்ஜெட்டில் (PMFBY) சேர்க்கப்படலாம். கால்நடைகளின் உரிமையாளர்கள் இதைப் பெற ஒரு சிறிய அளவிலான பிரீமியத்தைச் செலுத்த வேண்டியிருக்கும், மீதமுள்ள தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்கும்.
பாதுகாப்பு உபகரணங்களின் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்க, துறையின் நிதியுதவி 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கப்படலாம்.
தொற்றுநோய் காலத்திலிருந்து இலவச உணவு தானியத் திட்டத்தை திறமையாக நிர்வகிப்பதன் மூலம், வரவிருக்கும் நிதியாண்டில் அதன் உணவு மானியச் செலவைக் குறைப்பதற்கான அடித்தளத்தை அரசாங்கம் அமைத்துள்ளது.
சிறிய நகரங்களில் வேலை வாய்ப்புகளை ஊக்குவிக்க, சிறிய நகரங்களில் முதலீடு செய்ய நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது.
ஒவ்வொரு தனி நபரும் ஒரே வருமான வரி அடுக்கு விகிதங்களுக்கு உட்பட்டுள்ளனர். வித்தியாசமான வரி அடுக்குகள் வயது அம்சத்துடன் மட்டுமே பொருந்து நிலையில், நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களுக்கு தனித்துவமான வருமான வரி அடுக்குகள் மற்றும் விலக்கு சலுகைகள் இருக்க வேண்டும்.
புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் சதாப்தி மற்றும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்குப் பதிலாக படிப்படியாக மாற்றப்பட உள்ளன. எஃப்எம் சீதாராமனின் பட்ஜெட் 2023 உரையில், 400 வந்தே பாரத் ரயில்கள் சேவை தொடங்கும் தேதிகள் தொடர்பான அறிவிப்புடன் புதிய ரயில்கள் பற்றியும் குறிப்பிடப்படலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ