முத்தலாக் உள்பட நான்கு அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைப்பெற்றது. இதில், முத்தலாக் முறைக்கு எதிரான முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு, இந்திய மருத்துவ கவுன்சிலின் இடைக்கால கமிட்டி, கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மற்றும் நிதி நிறுவனங்கள் (சீட்டு கம்பெனி), ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதி திட்டங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் ஆகிய 4 அவசர சட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
#Cabinet approves Proposal for Promulgation of the Muslim Women (Protection of Rights on Marriage), Second Ordinance, 2019.
Read here: https://t.co/gCoXvuxHX5
— PIB India (@PIB_India) February 19, 2019
இச்சட்டத்திருத்தங்கள் யாவும் நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாததால் காலாவதியாகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேலையில் புதிய மின்னணு கொள்கை உருவாக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 1 கோடி வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில், ரூ.28 லட்சம் கோடி மதிப்பில் மின்னணு உற்பத்தி தொழில்களை உருவாக்குவது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.