கொல்கத்தா: கணவன்-மனைவி விவாகரத்து தொடர்பாக கல்கத்தா உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. மனைவியை விவாகரத்து செய்ய கணவருக்கு முழு உரிமை உண்டு என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. மனைவி மனரீதியாக சித்திரவதை செய்தால் அது துன்புறுத்தல் ஆகும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் கணவனைப் பெற்றோரிடமிருந்து பிரிந்து வாழ நிர்பந்திக்கும் நிலையில், பிரிந்து வாழ்வதற்கு எந்த உறுதியான காரணத்தையும் கூறவில்லை என்னும் போது கணவனுக்கு விவாகரத்து கோர உரிமை உண்டு. பெண் ஒருவரின் மனு மீதான விசாரணையின் போதே நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. உண்மையில், கணவரின் விவாகரத்து விண்ணப்பத்தை குடும்ப நீதிமன்றம் அனுமதித்தது. குடும்பநல நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அந்த பெண் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தீர்ப்பை வழங்கிய டிவிஷன் பெஞ்ச், பெற்றோரை கவனித்துக் கொள்வது மகனின் பொறுப்பு என்று கூறியது. இந்தியாவில் திருமணமான பிறகும் ஒரு மகன் பெற்றோருடன் வாழ்வது சகஜம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
மனைவியின் கொடுமையால் விவாகரத்து
2009 ஆம் ஆண்டு, மேற்கு மிட்னாபூரில் உள்ள குடும்ப நீதிமன்றம், மனைவியைக் கொடுமைப்படுத்தியதாகக் கூறி கணவருக்கு விவாகரத்து வழங்கியது. இந்த ஜோடி 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தம்பதிகள். இருப்பினும், மனைவி அவரை பகிரங்கமாக அவமானப்படுத்தினார் எனவும், அவள் தன் கணவனை ஒரு கோழை, வேலையில்லாதவன், எதற்கும் லாயக்கில்லை என்று தொடர்ந்து அவமானப்படுத்தி, மன ரீதியாக துன்புறுத்தி வந்தார் எனவும், பாதிக்கபப்ட்ட கணவர் புகார் அளித்திருந்தார். உண்மையில் கணவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்த போதிலும் வீட்டைச் சரியாக நடத்துவதற்குப் போதுமான பணம் சம்பாதிக்க முடியவில்லை. குழந்தைகளைத் தவிர, கணவரின் பெற்றோரும் குடும்பத்தில் சேர்ந்து இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், எந்த காரணமும் இல்லாமல் தனியாக ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்குமாறு மனைவியும் கணவரிடம் வலுக்கட்டாயமாக வற்புறுத்தி வந்தார். கணவனால் அதற்காக தனியாக பணம் செலவழிக்க இயலாது என்ற நிலையில், அப்போது அவருக்கு அரசு வேலை கிடைக்கும் நிலை ஏற்பட்டதும் அப்போது, மனைவி, தன்னை துன்புறுத்தியதாக கணவர் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கால் கணவரின் அரசு வேலை கனவு தகர்ந்தது.
மேலும் படிக்க | கற்பழிப்பினால் ஏற்படும் கர்ப்பத்தை போன்ற கொடுமை வேறு எதுவும் இல்லை: கேரள நீதிமன்றம்
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, எந்த காரணமும் இல்லாமல், பெற்றோரிடம் இருந்து விலகி இருக்குமாறு கணவனை மனைவி வற்புறுத்துவதாக நீதிமன்றம் கூறியது. இது ஒருவகையில் கொடூரமானது. கொல்கத்தா உயர் நீதிமன்றம், முன்னதாக 2016ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பையும் குறிப்பிட்டது. இதில் ஒரு மனைவி தன் கணவனை அழுத்தம் கொடுத்து பெற்றோரிடம் இருந்து விலகி இருக்க வற்புறுத்திய நிலையில், கணவர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். விவாகரத்துக்கு இதுவே போதுமான காரணம் என்று முன்னதாக, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. குறிப்பிட்ட இந்த வழக்கில், கணவரிடம், குடும்பத்தில் இருந்து பிரிந்து தனி வீடு எடுக்க பலமுறை வலியுறுத்தி வருவதாக கல்கத்தா உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒருவகையில் அது கொடுமையின் கீழ் வரும் எனவும், தனது முடிவுகளை மற்றவர்கள் மீது திணிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் படிக்க | கேரளா அட்டப்பாடி ’மது’ ஆணவக் கொலை வழக்கு தீர்ப்பு ! 13 குற்றவாளிகளுக்கு ஏழாண்டு சிறை
மேலும் படிக்க | ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம்... டொனால்டு டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ