CBSE 10th 12th Board Exams: நாளை சிபிஎஸ்இ 2 ஆம் பருவ பொதுத்தேர்வு

CBSE 10th 12th Board Exams: மாணவர்களின் தேர்வுகள் ஏப்ரல் 26ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 14 வரை நடைபெறும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 25, 2022, 01:04 PM IST
  • சிபிஎஸ்இ 2 ஆம் பருவ வாரியத் தேர்வு
  • நாளை 10,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு
  • இந்த தேர்வு ஜூன் 14 வரை நடைபெறும்
CBSE 10th 12th Board Exams: நாளை சிபிஎஸ்இ 2 ஆம் பருவ பொதுத்தேர்வு title=

நாடு முழுவதும் நாளை 10,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது. மேலும் இந்த தேர்வு ஜூன் 14 வரை நடைபெறும். இந்த ஆண்டு, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, போர்டு தேர்வு இரண்டு பருவமாக நடத்தப்படுகிறது. சிபிஎஸ்இ வாரியத்தின் முதலாம் பருவத் தேர்வு கடந்த நவம்பர்-டிசம்பர் 2021 இல் நடைபெற்றது. 

இதற்கிடையில் முதல் அமர்வில் வெறும் கொள்குறிவகை வினா விடையாக இருந்த நிலையில், இரண்டாம் அமர்வு எழுத்துத் தேர்வு வினாத்தாளில் புறநிலை வகை வினாக்களும், அகநிலை வினாக்களும் இடம் பெற்றிருக்கும். மாணவர்கள், இரண்டு அமர்வுகளிலும் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும், மாணவர்களின் செயல்பாடு உள் மதிப்பீடு அடிப்படையிலும் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

மேலும் படிக்க | 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத் தேர்வு

இந்த நிலையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் நிலைத் தேர்வுகளை நாளை ஏப்ரல் 26ஆம் தேதி முதல் நடத்துகிறது. 2ஆம் பருவத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்கள் ஏற்கனவே cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. 

சிபிஎஸ்இ 2 ஆம் பருவ வாரியத் தேர்வு: புதிய வழிமுறைகள்
* விடை எழுதும் முன் வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை கவனமாக படிக்கவும்.
* விடைத்தாள்கள் மற்றும் கூடுதல் தாள்களில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் ரோல் எண் மற்றும் பிற விவரங்களை எழுதவும்.
* கூடுதல் தாள்களை எண் வாரியாக வரிசைப்படுத்தி, சமர்ப்பிப்பதற்கு முன் அவற்றை விடைத்தாளில் சரியாகக் கட்டவும்.
* கடைசி நிமிட பதற்றத்தை தவிர்க்க சரியான நேரத்தில் தேர்வு நடைபெறும் இடத்திற்குச் செல்லுங்கள்.
* கோவிட்-19 வழிகாட்டுதல்கள் மற்றும் தேர்வு மைய வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும்.
* முகமூடியை அணியுங்கள், கை சுத்திகரிப்பை கொண்டு செல்லுங்கள்.
* தேர்வு நடைபெறும் இடத்திற்குள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம்.
* அனைத்து தேர்வு நாட்களிலும் உங்கள் ஹால் டிக்கெட்டின் அச்சிடப்பட்ட நகலை எடுத்துச் செல்லுங்கள்.

பருவம் 2 பாடத்திட்டம், மாதிரி தாள்களை பதிவிறக்கம் செய்ய, மாணவர்கள் cbseacademic.nic.in ஐப் பார்வையிடலாம்.

இதற்கிடையில் சிபிஎஸ்இ வாரியத் தலைவர் வினீத் ஜோஷி இன்று காலை 11 மணிக்கு நேரடி வெபினாரை நடத்தினார். 1 மணிநேரம் நடைபெற்ற இந்த நேரடி வலையரங்கில், வாரியத் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சில முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் பெறுவது எப்படி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News