Railway, Bank, SSC-அனைத்துக்கும் இனி ஒரே CET மூலம் ஆட்சேர்பு: மத்திய அரசு ஒப்புதல்!!

ரயில்வே, வங்கிகள் மற்றும் எஸ்.எஸ்.சி.க்கு பொதுவான தகுதி தேர்வுகளை (CET) நடத்த தேசிய ஆட்சேர்ப்பு முகமையை அமைக்க அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 19, 2020, 05:42 PM IST
  • இந்த நடவடிக்கை நாட்டின் வேலை தேடும் இளைஞர்களுக்கு பயனளிக்கும்.
  • ஆட்சேர்ப்பு, தேர்வு, வேலை வாய்ப்பு மற்றும் எளிமையான வாழ்க்கை ஆகியவற்றிற்கு இது வழி வகுக்கும்.
  • மத்திய அரசாங்கத்தில் கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட ஆட்சேர்ப்பு முகவர் நிலையங்கள் உள்ளன.
Railway, Bank, SSC-அனைத்துக்கும் இனி ஒரே CET மூலம் ஆட்சேர்பு: மத்திய அரசு ஒப்புதல்!! title=

ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவில், ரயில்வே, வங்கிகள் மற்றும் எஸ்.எஸ்.சி.க்கு பொதுவான தகுதி தேர்வுகளை (CET) நடத்த தேசிய ஆட்சேர்ப்பு முகமையை அமைக்க அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவ்டேகர் (Prakash Javdekar) , இந்த நடவடிக்கை நாட்டின் வேலை தேடும் இளைஞர்களுக்கு பயனளிக்கும் என்று வலியுறுத்தினார்.

CET இன் மதிப்பெண்கள் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். தேவைப்பட்டால் மீண்டும் தேர்வு எழுதி தங்கள் மதிப்பெண்ணை மேம்படுத்திக்கொள்ளலாம். இப்போதைக்கு, தேசிய ஆட்சேர்ப்பு நிறுவனம் மூன்று நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த தேர்வை நடத்தும். எனினும், எதிர்காலத்தில், அனைத்து மத்திய நிறுவனங்களுக்கும் தேர்வு நடத்தப்படும். இந்த மூன்று நிறுவனங்களுக்கான தேர்வுகளில் சுமார் 2.5 கோடி மாணவர்கள் பங்கேற்பார்கள்.

மாணவர்கள் ரயில்வே, வங்கிகள், எஸ்.எஸ்.சி என அனைத்துக்கும் இனி தனித்தனியே தேர்வுகள் எழுத வேண்டியதில்லை. இதுவரை இரண்டு மொழிகளில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டன. இனி, மாணவர்கள் 12 மொழிகளில் தேர்வு எழுத முடியும்.

இது சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக முக்கியமான சீர்திருத்தங்களில் ஒன்றாகும். ஆட்சேர்ப்பு, தேர்வு, வேலை வாய்ப்பு மற்றும் எளிமையான வாழ்க்கை ஆகியவற்றிற்கு இது வழி வகுக்கும். பின் தங்கிய வகுப்பில் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.

பொது நுழைவுத் தேர்வின் (CET) மெரிட் பட்டியல் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இந்த காலத்தில், வேட்பாளர்கள் தங்கள் திறமை மற்றும் விருப்பங்களைப் பொறுத்து வெவ்வேறு துறைகளில் வேலைக்கு விண்ணப்பிக்க முடியும் என்று சிங் கூறினார்.

"மத்திய அரசாங்கத்தில் (Central Government) கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட ஆட்சேர்ப்பு முகவர் நிலையங்கள் உள்ளன. நாங்கள் இப்போது மூன்று ஏஜென்சிகளின் தேர்வுகளை பொதுவாக்கியுள்ளோம். எனினும், காலப்போக்கில் அனைத்து ஆட்சேர்ப்பு முகமைகளுக்கும் (Recruitment Agencies) பொதுவான தகுதித் தேர்வை நாங்கள்கொண்டு வருவோம்." என்று அரசாங்க செயலர் சி சந்திரமௌலி கூறினார்.

ALSO READ: விதை விற்பனையாளர்களின் உரிமம் செப்டம்பர் வரை செல்லுபடியாகும், காலக்கெடுவை நீட்டிப்பு

ஜெய்ப்பூர், குவஹாத்தி, மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை பொது-தனியார் கூட்டாண்மை மூலம் குத்தகைக்கு விடுவதற்கான திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

ஒரு கோடி கரும்பு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் கரும்புக்கான நியாயமான மற்றும் ஊதியம் தரும் விலைக்கு மையம் ஒப்புதல் அளித்துள்ளது. 10 சதவீத அடிப்படை மீட்பு விகிதத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ .285 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

ALSO READ: விவசாயிகளுக்கு மோடி அரசின் மிகப்பெரிய பரிசு, அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு

உஜ்வல் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனாவின் கீழ் கடந்த ஆண்டின் வருவாயில் 25 சதவீதமான மூலதன வரம்புகளுக்கு மேல் டிஸ்காம்களுக்கு கடன்களை வழங்குவதற்காக பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் கிராமிய மின்மயமாக்கல் கார்ப்பரேஷனுக்கு, தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

Trending News