வரும் நாட்களில் உலகம் முழுவதும் தொலைத்தொடர்பு சேவையில் 5ஜி தொழில்நுட்பம் ஆதிக்கம் செலுத்த உள்ள நிலையில், 5ஜி (5G) தொழில்நுட்பத்தால் உருவாகும் கதிர்வீச்சு, உடல் நிலைக்கு கேடு விளைவிக்கும் என சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதற்கு எதிராக இந்தி திரப்பட நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான ஜூஹி சாவ்லா (Juhi Chawla) டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
ALSO READ | எச்சரிக்கை! தடுப்பூசி SMS மூலம் உங்கள் கணக்கில் உள்ள பணம் காலியாகலாம்
நாட்டில் 5 ஜி வயர்லெஸ் நெட்வொர்க்குகள் (5G wireless network) அமைப்பதை எதிர்த்து ஜூஹி சாவ்லா தாக்கல் செய்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 4) தள்ளுபடி செய்தது. நீதிமன்றம், இந்த மனுவில் வாதிகள் சட்ட அமைப்பை தவறாக பயன்படுத்தியதாக கூறியதோடு, நடிகைக்கு ரூ .20 லட்சம் அபராதம் விதித்ததாகவும் ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டுள்ளது.
தில்லி உயர்நீதிமன்றம் தனது உத்தரவில், 'இந்த வழக்கு விளம்பரத்திற்காக போடப்பட்டது போல் தெரிகிறது' என்று கூறியது. ஜூஹி சாவ்லா சமூக ஊடகங்களில் விசாரணையின் வீடியோ லிங்கை பரப்பியதால், மூன்று முறை நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன என உயர்நீதி மன்றம் கூறியது.
"டெல்லி காவல்துறை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய நபர்களை அடையாளம் கண்டு, நடவடிக்கை எடுக்கும்" என்று நீதிமன்றம் மேலும் கூறியது.
இந்த விவகாரம் தொடர்பான விசாரணையின் போது டெல்லி உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை பாதிக்கும் வகையில் செயல்பட்ட நபரை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்குமாறு தில்லி காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆன்லைன் மூலம் நடைபெற்ற விசாரணையின் போது நடிகர் ஜூஹி சாவ்லாவின் பிரபலமான திரைப்படங்களில் இருந்து, அடையாளம் தெரியாத நபர் பாடல்களைப் தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தார். பின்னர் அவர் ஆன்லைன் இணைப்பில் இருந்து அகற்றப்பட்டார்.
அதே சமயம் ஜூஹி, உடல் நலத்திற்கு கேடானது என கூறப்பட்டுள்ள மேகியின் விளம்பரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Israel: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் நாற்காலியை அசைத்து பார்க்கும் பென்னட்..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR