டெல்லி வன்முறை: இதுவரை 9 பேர் பலி; 130 பேர் காயமடைந்தனர்

வன்முறை நடந்த பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. நேற்று நடந்த வன்முறையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக ஜிடிபி மருத்துவமனை தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 25, 2020, 05:09 PM IST
டெல்லி வன்முறை: இதுவரை 9 பேர் பலி; 130 பேர் காயமடைந்தனர் title=

புது டெல்லி: வடகிழக்கு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்த வன்முறையில் 9 பேர் இறந்துள்ளதாக ஜிடிபி மருத்துவமனை தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் 130 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டு உள்ளது. 

வன்முறை தாக்குதலில் இறந்த டெல்லி தலைமை கான்ஸ்டபிள் அதிகாரி ரத்தன் லாலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் போலீஸ் செயலகத்தை அடைந்தார். இதில் டெல்லி போலீஸ் கமிஷனர் நித்யானந்த் ராய் கலந்து கொண்டார். 

டெல்லி காவல்துறையின் தலைமை கான்ஸ்டபிள் ரத்தன் லால் டெல்லி வன்முறையை கட்டுப்படுத்தும் போது நேற்று கொல்லப்பட்டார். அவர் ராஜஸ்தானின் சிகார் நகரில் உள்ள திஹாவலி கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு சித்தி(12), கனக்(10) என இரு மகள்களும், ராம்(7) என்ற ஒரு மகன்  உள்ளனர். ரத்தன் லால் 1998 இல் காவல்துறையில் சேர்ந்தார். வடகிழக்கு டெல்லியில் உள்ள கோகுல்பூரி காவல்துறையின் துணைப்பிரிவு பதவில் நியமிக்கப்பட்டிருந்தார்.

டெல்லி வன்முறையில் காயமடைந்தவர்களை ஜி.டி.பி மருத்துவமனையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மற்றும் பிரதிநிதிகள் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

Trending News