இதுவரை 7 பேர் பலி.. 100-க்கு மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனர்

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக இதுவரை போலீசார்,பொதுமக்கள் என மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 100-க்கு மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனர்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 25, 2020, 09:22 AM IST
  • டெல்லி டி.சி.பி அமித்தை காரில் இருந்து கலகக்காரர்கள் இழுத்துச் சென்றனர். நிலைமை மோசம்.
  • ஜஃப்ராபாத்தில் ஒரு நபர் அடித்தே கொல்லப்பட்டார். உயிருக்காக மன்றாடினார். ஆனால் வன்முறை கூட்டம் அவரை கொன்றது.
  • பஜான்புராவில் தீயை அணைக்க சென்ற பயர் டெண்டர் காரும் எரிக்கப்பட்டது.
இதுவரை 7 பேர் பலி.. 100-க்கு மேற்பட்டோர் பேர் காயமடைந்துள்ளனர் title=

புது டெல்லி: இன்று டெல்லி மாநகரில் என்ன நடக்கும் என்ற அச்சம் மற்றும் பதற்றம் நிலவி வருகிறது. நேற்று திங்கள்கிழமை அன்று டெல்லியின் ஒரு பகுதி எரிந்துக்கொண்டு இருந்தது. சந்த் பாக் முதல் ஜாப்ராபாத் வரை வடகிழக்கு டெல்லியின் பகுதிகளில் நடந்த இரத்தக்களரி களியாட்டத்தை நிறுத்த யாரும் இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டத்தை (CAA Protest) எதிர்த்து நடந்தப்பட்ட போராட்டம் வன்முறையின் வடிவத்தை எடுத்தது. சி.ஏ.ஏ-வை எதிர்ப்பவர்களும், அதை ஆதரப்பவர்களும் புரிந்து கொள்ளாமல் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். நேற்று நடந்த வன்முறையில் தேநீர் கடை, வாகனங்கள் உட்பட பல பொருட்கள் எரிக்கப்பட்டது. தலைமை கான்ஸ்டபிள் ரத்தன் லால் குற்றவாளிகளால் கொல்லப்பட்டார். டி.சி.பி அமித் மருத்துவமனையில் வாழ்க்கை மற்றும் மரணத்துடன் போராடி வருகிறார். மேலும் பொதுமக்கள் 5 பேர் உயிர் இழந்தனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வருகையின் போது வன்முறையால் கொல்லப்பட்ட அனைவரின் மரணம் பல பெரிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

டெல்லியில் யார் குற்றவாளி?
கற்கள், பேலஸ்ட்கள், எரியும் டயர்கள், உடைந்த கண்ணாடித் துண்டுகளால் மூடப்பட்ட டெல்லியின் தெருக்களில் இருந்து வெளியேறும் புகை காட்சிகளை பார்க்கும் போது, இதற்கு காரணமான குற்றவாளி யார் என்று கேட்கிறார்கள். 10 க்கும் மேற்பட்ட போலீசார் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். டெல்லி தூங்கிக் கொண்டிருந்தபோது கூட இரவில் வன்முறை பற்றிய தகவல்கள் வந்தன. வடகிழக்கு டெல்லியின் ஃபிசா பகுதி கடும் பதற்றத்தை சந்தித்து வருகிறது. பொதுமக்கள் மிகவும் பயப்படுகிறார்கள். வன்முறை வெடித்த பகுதிகளில் பிரிவு 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் வரவில்லை என்றால், ஊரடங்கு உத்தரவுக்கு தயாராக உள்ளது. டெல்லி காவல் துறையினருடன் இணைந்து வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர சிஆர்பிஎஃப் வீரர்களும் டெல்லி வந்தனர். 

Trending News