பெண் ஊழியர்களுக்கு மெசேஜ் அனுப்பும் EPFO: உங்களுக்கும் வந்ததா? இதுதான் சர்வே!!

EPFO Employer Rating Survey: இபிஎஃப்ஓ உடன் இந்த கணக்கெடுப்பில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவையும் ஈடுபட்டுள்ளன. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 6, 2024, 09:14 AM IST
  • கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகள்.
  • 30 கோடி சந்தாதாரர்களுக்கு சர்வே அனுப்பப்பட்டுள்ளது.
  • ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு நிலை எப்படி உள்ளது?
பெண் ஊழியர்களுக்கு மெசேஜ் அனுப்பும் EPFO: உங்களுக்கும் வந்ததா? இதுதான் சர்வே!! title=

EPFO Employer Rating Survey: பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு சில நாட்களாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதாவது EPFO தரப்பிலிருந்து டெக்ஸ்ட் மெசேஜ்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. நிறுவனம் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குகின்றதா என்பது போன்ற கேள்விகள் இந்த மெசேஜ்கள் மூலம் கேட்கப்படுகின்றன. இபிஎஃப்ஓ உடன் இந்த கணக்கெடுப்பில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவையும் ஈடுபட்டுள்ளன. பல வகையான நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களின் பங்களிப்பு பற்றி தெரிந்து கொள்வது இந்த கணக்கெடுப்பின் நோக்கமாக உள்ளது. இந்த கணக்கெடுப்பு மூலம் நிறுவனங்களின் மதிப்பீடும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகள் என்ன?

நிறுவனங்களின் மதிப்பீட்டுக்கான இந்த கணக்கெடுப்பில் பல வகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன. இதில் பெண் ஊழியர்கள் சரி, தவறு மற்றும் பொருந்தாது (Yes, No, Not Applicable) ஆகிய ஆப்ஷன்களில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் மூலம் நிறுவனங்கள் தங்கள் பெண் ஊழியர்களை எவ்வாறு நடத்துகின்றன என்பது தெரியவரும். மேலும் இந்த நிறுவனங்களில் மொத்த பணியாளர் எண்ணிக்கையில் பெண்களின் எண்ணிக்கை எவ்வளவு உள்ளது என்பதையும் கணக்கெடுப்பு தெரிவிக்கும். 

கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகள்

பாலியல் தும்புருத்தாள்களுக்கு (Sexual Assault) எதிராக புகார் அளிக்க நிறுவனத்தில் வசதிகள் உள்ளனவா? குழந்தைகள் காப்பகம் இருக்கின்றதா? சம வேலைக்கான சம ஊதியம் கிடைக்கின்றதா? இரவு வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்கான வசதிகள் அளிக்கப்படுகின்றதா? என்பது போன்ற பல கேள்விகள் இந்த கணக்கெடுப்பில் கேட்கப்படும்.

மேலும் படிக்க | World's TOP CEOs: எலான் மஸ்க், சுந்தர் பிச்சையை பின்னிக்குத் தள்ளிய முகேஷ் அம்பானி!

30 கோடி சந்தாதாரர்களுக்கு சர்வே அனுப்பப்பட்டுள்ளது

பல கேள்விகளைக் கொண்ட இந்த கணக்கெடுப்பை (Survey) இபிஎஃப்ஓ 30 கோடி சந்தாதவர்களுக்கு (PF Subscribers) அனுப்பி உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 202-23 ஆம் ஆண்டு வரை 28 லட்சம் பெண் ஊழியர்கள் இபிஎஃப்ஓ -வில் பதிவு செய்யப்பட்டிருந்ததாக தொழிலாளர் அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. அது அப்போது மிகப்பெரிய எண்ணிக்கையாக இருந்தது. சென்ற வாரம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்ம்ருதி இரானி இந்த நிறுவன தரமதிப்பீட்டு கணக்கெடுப்பு (Employer Rating Survey) பற்றிய தகவலை தெரிவித்தார். இந்த கணக்கெடுப்பு, ‘சக்‌ஷம் நாரி சக்‌ஷம் பாரத் - முன்னேற்றம் அடைந்த இந்தியாவுக்கான பணியாளர் குழுவில் பெண்கள்’ என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது என்று அவர் கூறினார்.

ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கான வேலை வாய்ப்பு நிலை எப்படி உள்ளது?

பெண்களுக்கான (Women Employees) வேலை வாய்ப்பை பொறுத்த வரையில் உலக அளவில் இந்தியா குறைந்த தரவரிசையில் உள்ள நாடுகளில் ஒன்றாக இருக்கின்றது. 2022-23 ஆம் ஆண்டின் படி, வேலைவாய்ப்பில் பெண்களின் பங்களிப்பு 27.8% -ஐ எட்டி உள்ளதாக தொழிலாளர் கணக்கெடுப்பு தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. 2017-18 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 17.5% ஆக இருந்தது. பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி வரும் இன்றைய நிலையிலும் அவர்களுக்கு சமமான வேலை வாய்ப்புகளும் சமமான ஊதியமும் கிடைப்பதில்லை என்பது நிதர்சனமான உண்மை. EPFO -வின் இந்த கணக்கெடுப்பின் மூலம் பணியிடங்களில் பெண்களின் உண்மையான நிலை பற்றிய விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க | டாப் 5 உணவு வணிக ஐடியாக்கள்: கை நிறைய சம்பாதிக்க, எந்த தொழிலை தொடங்கலாம்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News