சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு: சுவிஸ் வங்கிகளில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மற்றும் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளது குறித்து அடிக்கடி கேள்விகள் எழுகின்றன. இந்திய குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் சுவிஸ் வங்கியில் எவ்வளவு பணம் முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்த தகவலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு திங்கள்கிழமை பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்த விளக்கினார்.
சுவிஸ் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ள தொகை
மக்களவையில், தீபக் பைஜ் மற்றும் சுரேஷ் நாராயண் தநோர்கர் ஆகியோர், சுவிஸ் வங்கிகளில் இந்திய குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் டெபாசிட் செய்த தொகை அதிகரித்துள்ளதா என்பது இதற்கு பதிலளித்து மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், பனாமா பேப்பர் லீக்ஸ், பாரடைஸ் பேப்பர் லீக்ஸ் மற்றும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகளை விரைவாக, ஒருங்கிணைந்த விசாரணை நடத்த பல நிறுவனங்களை கொண்ட அரசை அரசு அமைத்துள்ளது என்றும் வெளிநாட்டு சொத்துக்கள் தொடர்பான பண்டோரா லீகஸ் தொடர்பான விசாரணை நடத்த, அமலாக்க முகவர்/அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு (MAG) அமைக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் படிக்க | SBI வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS! வாட்ஸ்அப் வங்கி சேவையை தொடங்கியது எஸ்பிஐ
நிதியமைச்சர் வெளியிட்ட தகவல்
இது குறித்து நிதியமைச்சர் மேலும் கூறுகையில், 'சுவிஸ் வங்கிகளில் இந்திய குடிமக்கள் மற்றும் நிறுவனங்களால் எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் இல்லை. இருப்பினும், 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட இந்தியர்களின் சொத்துக்கள் அதிகரித்துள்ளதாக சில ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. எனினும் சுவிட்சர்லாந்தில் இந்தியர்கள் டெபாசிட் செய்ததாகக் கூறப்படும் பணம், கறுப்புப் பணம் என்று குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் விளக்கினார்
சுவிஸ் நேஷனல் வங்கி வெளியிட்ட தரவுகள்
சுவிஸ் நேஷனல் வங்கி (SNB) வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் இந்திய ஊடகங்கள், சுவிஸ் நிதியில் உள்ள இந்தியர்களின் சொத்துக்களின் அளவை வெளியிடுகின்றன. ஆனால், இந்த தரவுகளை முறையாக பகுப்பாய்வு செய்து வெளியிடவில்லை என்றால் இது தவறான தகவல்களை தான் கொடுக்கும். இதுமட்டுமின்றி, சுவிட்சர்லாந்தில் இந்திய குடிமக்கள் முதலீடு செய்த பணம் குறித்து அறிவிக்கப்படாது என்று மீண்டும் மீண்டும் தவறான கருத்து தெரிவிக்கப்பட்டு வருவதாக, நிதியமைச்சர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | ITR போர்டலில் பயனர்கள் சந்திக்கும் ‘சிக்கல்கள்’; அரசு கூறுவது என்ன..!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ