காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி; அதிர்ச்சியில் தொடர்கள்!

அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 16, 2021, 12:53 PM IST
காங்கிரஸில் இருந்து விலகிய முன்னாள் எம்.பி; அதிர்ச்சியில் தொடர்கள்! title=

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை எம்.பி யாக சுஸ்மிதா தேவ் (Sushmita Dev) இருந்துள்ளார். இதனையடுத்து அக்கட்சியின் பெண்கள் ஆணியான மகிளா காங்கிரஸின் தலைவராகவும் இருந்துள்ளார். 

இந்நிலையில் சுஸ்மிதா தேவ் காங்கிரஸ் கட்சி (Congress) பொறுப்புகழில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். இவரது விலகல் கடிதத்தை கட்சித்தலைவர் சோனியா காந்திக்கு (Sonia Gandhi) அனுப்பி உள்ளார்.

ALSO READ | காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்: ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்தது கட்சி

அந்த கடிதத்தில் கூறியுள்ளதாவது, "இந்திய தேசிய காங்கிரஸ் உடனான எனது மூன்று வருட தொடர்பை நான் மதிக்கிறேன். இந்த மறக்கமுடியாத பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த கட்சி, அதன் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். வழிகாட்டுதலையும் வாய்ப்பையும் வழங்கியதற்காக சோனியா காந்திக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸில் அண்மை காலமாக உட்கட்சி பூசல் நடந்து வருவதால் சில முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளார். மேலும் ஜோதிராதித்ய சிந்தியா, ஜித்தின் பிரசாத் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்கள் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனர்.

 அந்தவகையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுஸ்மிதா தேவ் கட்சியில் இருந்து விலகியுள்ளது தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அண்மையில் சர்ச்சை கூறிய பதிவை பதிவிட்டதாக கூறி ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர் சிலரது ட்விட்டர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டிருந்ததில் சுஸ்மிதா தேவ் வின் கணக்குகளும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | பிரசாந்த் கிஷோர் காங்கிரசில் சேருவாரா? பிஜேபி-க்கு எதிராக மாஸ்டர் பிளான்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News