இலவச LPG சிலிண்டர்... ஹோலி பண்டிகையை ஒட்டி இந்த மாநில மக்களுக்கு கிடைத்துள்ள பரிசு!

பிரதமர் நரேந்திர மோடி, மிகவும் எதிர்பாராத வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சிறப்புச் சலுகையாக வீட்டு உபயோகத்திற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து, விலைவாசி உயர்வில் இருந்து ஏழை மக்களுக்கு சற்று நிவாரணம் அளித்துள்ளார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 25, 2024, 07:25 AM IST
  • இலவச சிலிண்டர் திட்டத்தின் கீழ் பலன் பெற நிபந்தனைகள்.
  • உத்திர பிரதேச அரசின் இலவச சிலிண்டர் திட்டம்.
  • 2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உஜ்வாலா திட்டம்.
இலவச LPG சிலிண்டர்... ஹோலி பண்டிகையை ஒட்டி இந்த மாநில மக்களுக்கு கிடைத்துள்ள பரிசு! title=

பிரதமர் நரேந்திர மோடி, மிகவும் எதிர்பாராத வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சிறப்புச் சலுகையாக வீட்டு உபயோகத்திற்கான சமையல் காஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து, விலைவாசி உயர்வில் இருந்து ஏழை மக்களுக்கு சற்று நிவாரணம் அளித்துள்ளார். இது நாடு முழுவதும் உள்ள பல லட்சம் குடும்பங்களின் நிதிச் சுமையை குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைக்கும் இந்த அறிவிப்புக்கு பெரும் வரவேற்பு இருந்தது. இதன் மூலம் இதுவரை ரூ.918 என்ற விலையில் விற்கப்பட்ட சமையல் கேஸ் சிலிண்டர் இனி ரூ.100 குறைக்கப்பட்டு ரூ.818 என்ற விலையில் விற்கப்படும்.

மத்திய அரசின் இந்த பரிசுடன், உத்தரபிரதேச அரசும் மக்களுக்கு பரிசு வழங்கியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் யோகி ஆதித்யநாத் அரசு ஹோலி பண்டிகையை முன்னிட்டு சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு இலவச சிலிண்டர்களை பரிசாக வழங்கியுள்ளது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர்களை உத்திர பிரதேச அரசு வழங்குகிறது. இந்த திட்டத்தை, உத்திர பிரதேச அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

உத்திர பிரதேச அரசின் இலவச சிலிண்டர் திட்டம்

ஹோலி பண்டிகை தினத்தை ஒட்டி, யோகி ஆதித்யநாத் அரசு 2 கோடி உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர்களை வழங்க உள்ளது. கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி, யோகி அரசாங்கம் இந்த பரிசை அறிவித்தது. அதன் படி, உத்திர பிரதேச அரசு, ஆண்டுக்கு இரண்டு முறை, உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர்களை வழங்கும். தீபாவளி மற்றும் ஹோலி பண்டிகையை ஒட்டி, இந்த பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். இதன் மூலம் மாநிலத்தில் உள்ள சுமார் 2 கோடி குடும்பங்கள் பயனடைவார்கள். இந்த திட்டத்திற்காக யோகி அரசு ரூபாய் 2312 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஹோலி தவிர, தீபாவளிக்கும் முன்னதாகவும், உஜ்ஜவலா திட்ட பயனாளிகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர்களையும் அரசாங்கம் வழங்கும்.

மேலும் படிக்க | 'பைத்தியம் இல்லை, உங்களுக்கு வைத்தியம் பார்க்க வந்துள்ளேன்' - திமுகவுக்கு தமிழிசை பதிலடி!

இலவச சிலிண்டர் திட்டத்தின் கீழ் பலன் பெற நிபந்தனைகள்

அரசின் இலவச சிலிண்டர் திட்டத்தின் பலனை பெற அரசு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெற, பயனாளி உஜ்வாலா திட்டத்திற்குத் தகுதி பெற்றிருக்க வேண்டும். உத்தரபிரதேசத்தில் வசிக்கும் பயனாளிகளுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். அதாவது உத்தர பிரதேச மக்கள் மட்டுமே இந்த திட்டத்தின் பலனைப் பெறுவார்கள். இந்த திட்டத்தின் கீழ் இலவச காஸ் சிலிண்டர் பெற, உங்கள் வங்கி கணக்கை ஆதார் அட்டையுடன் இணைப்பது கட்டாயம். 
 
2016 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட உஜ்வாலா திட்டம் 

பிரதமர் நரேந்திர மோடி , 2016 ஆம் ஆண்டில், சமையல் எரிவாயு சிலிண்டரை மேலும் எளிதாக வாங்கும் நிலையை உருவாக்க, பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனாவைத் தொடங்கினார். இத்திட்டத்தின் கீழ், சிலிண்டர் ஒன்றுக்கு, அரசு 300 ரூபாய் மானியமாக வழங்குகிறது. இந்த மானியம் 31 மார்ச் 2025 வரை கிடைக்கும். இந்தத் திட்டத்தில், குடும்பம் ஒரு வருடத்தில் மானிய விலையில் 12 சிலிண்டர்களைப் பெறலாம். இத்திட்டத்தின் கீழ் இதுவரை நாட்டில் 9 கோடிக்கும் அதிகமான குடும்பங்களுக்கு இலவச எரிவாயு கேஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | மதிமுக சிட்டிங் எம்.பி., கணேசமூர்த்தி தற்கொலை முயற்சி...? அரசியல் களத்தில் அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News