கடந்த சில நாட்களாக, உலகளாவிய காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றத்தைக் கண்டு வருகிறோம். எனினும், வரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள்.
இன்று (பிப்ரவரி 15) காலை நிலவரப்படி, சென்னையில் 22 கார்ட ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 4,738 ஆக விற்கப்படுகின்றது. 18 காரட் தங்கம் ரூ. 3,881 ஆக உள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ. 38,000 ஐ நெருங்கியுள்ள நிலையில், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நேற்று காலை கிராம் ஒன்றுக்கு ரூ. 4687 ஆகவும் மாலை ரூ. 4695 ஆகவும் இருந்த தங்கத்தின் விலை இன்று காலை கிராமுக்கு ரூ. 43 அதிகரித்தது.
ஒரு சவரன் தங்க விலையைப் பார்த்தால், நேற்று மாலை நிலவரப்படி ரூ. 37,560-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 344 உயர்ந்து ரூ.37,904-க்கு விற்பனையில் உள்ளது.
கடந்த 10 நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலையில், கணிசமான அதிகரிப்பைக் காண முடிகின்றது. இந்த வார தொடக்கமும் ஏற்றத்துடனேயே தொடங்கிய நிலையில், வாரத்தின் இரண்டாவது நாளான இன்றும் தங்க விலையில் எந்த நிவாரணமும் இல்லை.
மேலும் படிக்க | பெட்ரோல் விலை விண்ணைத் தொடும் அபாயம் - காரணம் என்ன?
இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி 0.60 காசுகள் குறைந்து ரூ. 69.20-க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை நேற்று காலை கிராமுக்கு ரூ. 68.20 ஆகவும் மாலையில் ரூ. 69.80 ஆகவும் இருந்தது.
சர்வதேச சந்தை நாணய விலை மாற்றம், பணவீக்கம், மத்திய வங்கிகளில் தங்க இருப்பு, அவற்றின் வட்டி விகிதம், நகை சந்தை, புவியியல் பதற்றம், வர்த்தகப் போர்கள் மற்றும் பல காரணிகள் தங்கத்தின் விலையை பாதிக்கும்.
இந்தியாவைப் பொறுத்த வரை, பல்வேறு மாநிலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் மாறுபடும். பல்வேறு வரி வகைகளைப் பொறுத்து பல்வேறு இடங்களில் விலைகள் மாறுபடுகின்றன. மேலும், செய்கூலி, சேதாரம் ஆகியவற்றின் அடிப்படையிலும், கடைக்கு கடை விலையில் ஏற்ற இறக்கத்தைக் காண முடிகின்றது.
இதற்கிடையில் தங்கத்தின் ஏறுமுகம் தொடரும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள். ரஷ்யா உக்ரைன் விவகாரத்தால், உலக சந்தையில் ஸ்திரமற்ற நிலை உள்ளது. இந்த பதட்டத்தின் முக்கிய தாக்கம் தங்கத்தில் இருக்கக்கூடும். போர் மூளும் சூழல் ஏற்பட்டால், அமெரிக்க ஃபெடரல் வங்கிகள் மற்றும் டாலரின் நிலையை பெரிதும் சார்ந்துள்ள தங்க விலையில் திடீர் ஏற்றம் வர அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாக சந்தை நிபுணர்கள் கருதுகிறார்கள்.
மேலும் படிக்க | முதலீட்டாளர்களை புரட்டிப்போட்ட பங்குச்சந்தை: சரிவின் முக்கிய காரணங்கள் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR