புதுடெல்லி: மருத்துவப் படிப்புக்கான இட ஒதுக்கீட்டில் யுஜி / பிஜி மருத்துவ படிப்புகள் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
அனைத்து மருத்துவ படிப்புகளுக்கும் அகில இந்திய ஒதுக்கீடு திட்டத்தில் (எம்பிபிஎஸ் / எம்.டி / எம்.எஸ் / டிப்ளோமா / பி.டி.எஸ் / எம்.டி.எஸ்) ஓ.பி.சி.க்களுக்கு 27% இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த இட ஒதுக்கீடு, நடப்பு கல்வி ஆண்டு (2021-22) முதல் அமலுக்கு வரும் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமைச்சகத்தின் இந்த அறிவிப்பால் கிட்டத்தட்ட 5,550 மாணவர்கள் பயனடைவார்கள்.
பின்தங்கிய சமூகத்தினர் (Backward Classes) மற்றும் பொருளாதாரரீதியீல் பின் தங்கியவர்கள் (Economically Weaker Section) பயனடையும் விதமாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் இட ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்துள்ளது.
இந்த செய்தியை சுகாதார அமைச்சகம், தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளது.
Ministry has taken a decision for providing 27% reservation for OBCs & 10% reservation for Economically Weaker Section in the All India Quota Scheme for UG and PG medical/dental courses (MBBS/MD/MS/Diploma/BDS/MDS) from the current academic year 2021-22 onwards: Health Ministry pic.twitter.com/5BTzXg8Z2b
— ANI (@ANI) July 29, 2021
மருத்துவப் படிப்பில் ஓ.பி.சி. வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படாதது தொடர்பாக பல ஆண்டுகளாக சர்ச்சைகள் தொடர்ந்துவந்தன. நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையில் மத்திய தொகுப்பிற்கு 15 சதவிகித இடங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல, அரசியலமைப்பு சட்டம் 15-ன் உட்பிரிவு 5-ன்படி, கல்வி இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு மத்திய பொதுத் தொகுப்பில் இருந்து வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு மருத்துவப் படிப்பில் மத்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்படவில்லை.
இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாத காரணத்தால் கடந்த 3 ஆண்டுகளாக ஓ,பி.சி பிரிவினருக்கு கிடைத்திருக்க வேண்டிய சுமார் 10 ஆயிரம் இடங்கள் பொதுப்பிரிவினருக்கு சென்றுவிட்டதாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் ஓபிசி ஊழியர்கள் கூட்டமைப்பு புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | வன்னியர் இட ஒதுக்கீடு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அன்புமணி இராமதாஸ் நன்றி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR