ஏழைக் குடும்பங்களுக்கு அரசு புதிய திட்டம், இனி நிதி உதவி கிடைக்கும்

Financial Aid Scheme: பல மாநில அரசுகள் ஏழைகளுக்கு இலவச ரேஷன் மற்றும் மானிய விலையில் ரேஷன் வழங்குகின்றன. தற்போது ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஏழைகளுக்காக மற்றொரு புதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Mar 17, 2023, 08:28 AM IST
  • ஏழைக் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.
  • குடும்ப அடையாள அட்டையின் அடிப்படையில் ஆண்டு வருமானம் சரிபார்க்கப்படும்.
  • பயனாளியின் வயதைப் பொறுத்து நிதி உதவி மாறுபடும்.
ஏழைக் குடும்பங்களுக்கு அரசு புதிய திட்டம், இனி நிதி உதவி கிடைக்கும் title=

ஹரியானா அரசின் புதிய திட்டம்: ஹரியானாவில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிதி உதவித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 1.80 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கான நிதி உதவித் திட்டத்தை முதல்வர் மனோகர் லால் கட்டார் (எம்.எல். கட்டார்) வியாழக்கிழமை தொடங்கி வைத்தார் 

ஏழைக் குடும்பங்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மோடி அரசால் ஏழைகளுக்காக தொடங்கப்பட்டது. இதேபோல், பல மாநில அரசுகள் ஏழைகளுக்கு இலவச ரேஷன் மற்றும் மானிய விலையில் ரேஷன் வழங்குகின்றன. தற்போது ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் ஏழைகளுக்காக மற்றொரு புதிய திட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

எந்த குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்
1.80 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கான நிதி உதவித் திட்டத்தை முதல்வர் கட்டார் தொடங்கியுள்ளார். இத்திட்டத்தின் கீழ், அத்தகைய குடும்ப உறுப்பினர் இறப்பு அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் நிதி உதவி வழங்கப்படும். அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, தீன் தயாள் உபாத்யாயா அந்த்யோதயா பரிவார் சுரக்ஷா யோஜனா திட்டத்தின் நோக்கம், ஆண்டு வருமானம் ரூ.1.80 லட்சத்துக்கும் குறைவான குடும்ப உறுப்பினர் மரணம் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டால் நிதி உதவி வழங்குவதாகும்.

மேலும் படிக்க | முதலிரவில் எதுவும் நடக்கல... வார்த்தையை விட்ட 2k கிட் மணப்பெண் - கொடூரமாக கொன்ற மாப்பிள்ளை!

குடும்ப அடையாள அட்டையின் அடிப்படையில் ஆண்டு வருமானம் சரிபார்க்கப்படும். பயனாளியின் வயதைப் பொறுத்து நிதி உதவி மாறுபடும். இதனுடன், பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா ஆகியவற்றின் கீழ் இரண்டு லட்சம் ரூபாயும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படும். இந்த புதிய திட்டத்தை ஒரு நிகழ்ச்சியின் போது கட்டார் திறந்து வைத்தார், ஹரியானா குடும்பப் பாதுகாப்பு அறக்கட்டளை இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் முகவராக இருக்கும் என்று கூறினார்.

மேலும் படிக்க | மீண்டும் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து... 2 விமானிகளும் உயிரிழப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News