அமெரிக்கர்களை மட்டுமே வேலைக்கு அமர்த்துவதற்கான புதிய திட்டத்தின் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்..!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump), அரசு நிறுவனங்களில் அமெரிக்க குடிமக்களை மட்டுமே பணியில் அமர்த்தும் வகையில் புதிய திட்டத்தை நிறைவேற்று ஆணையில் கையெழுத்திட்டார். அமெரிக்க அரசின் அவுட்சோர்சிங் ஒப்பந்தங்களில் அமெரிக்கர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில், அமெரிக்க முதலாளிகள் H-1B தொழிலாளர்களைப் பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும் அது கோரியுள்ளது. H-1B விசா திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகளாக இந்தியர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“இந்த உத்தரவு இலாபகரமான கூட்டாட்சி ஒப்பந்தங்களில் அமெரிக்காவின் உழைப்பில் பெடரல் ஏஜென்சிகள் கவனம் செலுத்தும் ஒரு கொள்கையை உருவாக்கும்” என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறியது. “US குடிமக்கள் மற்றும் பிரஜைகள் மட்டுமே அரசு பணிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்” என்பதை உறுதிப்படுத்த அனைத்து கூட்டாட்சி அமைப்புகளும் உள் தணிக்கை செய்யும்.
ALSO READ | ஒரு சொல், ஒரு வில், ஒரு இல்… உதாரண புருஷனாய் வாழ்ந்து காட்டிய ஸ்ரீ ராமன்!!
“ஜனாதிபதி டிரம்பின் நடவடிக்கைகள், முதலாளிகளின் H-1B விசாக்களை தவறாகப் பயன்படுத்துவதை எதிர்த்துப் போராட உதவும். அவை ஒருபோதும் தகுதிவாய்ந்த அமெரிக்க தொழிலாளர்களை குறைந்த விலையில் வெளிநாட்டு தொழிலாளர்களிடம் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.” என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க நிறுவனங்களான பேஸ்புக், கூகிள், மைக்ரோசாப்ட் மற்றும் அமேசான் மற்றும் இந்திய IT நிறுவனங்களான இன்போசிஸ், TCS மற்றும் விப்ரோ ஆகியவற்றால் பணியமர்த்தப்பட்டவர்கள் H-1B விசா திட்டத்தின் மிகப்பெரிய பயனாளிகள் ஆவர். இதைத் தவிர, முக்கியமான தகவல்களை உள்ளடக்கிய தகவல் தொழில்நுட்ப வேலைகளுடன் வெளிநாட்டினர் இணைக்கப்பட்டால், அவுட்சோர்சிங் நடைமுறை, தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாக முடியும் என்று டிரம்ப் நிர்வாகம் கருதுகிறது.