மும்பையில் உள்ள ஹாஜி அலி தர்காவில் ஆண்களுடன் இணைந்து பெண்களும் வழிபாடு நடத்த அனுமதி வழங்கி மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு தடை விதிப்பது என்பது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தர்காவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மாநில அரசை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மும்பை ஐகோர்ட் கூறியுள்ளது.
நூர்ஜெஹான் நியாஜ் மற்றும் ஜாகியா சோமன் தொடரப்பட்ட பொது நல வழக்கில் கூறியதாவது:- குரான் மற்றும் அரசியல் சாசனம் அடிப்படையிலும் எங்களுக்கு வழங்கப்பட்ட அடிப்படை உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டுக்கு முன் வரை பெண்கள் தர்காவிற்குள் அனுமதிக்கப்பட்டனர் எனக்கூறினார்கள்.
மேலும் மகாராஷ்டிரா அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டதாவது:- பெண்களுக்கு தடை விதிக்க தர்கா நிர்வாகத்திற்கு உரிமையில்லை. தொழுகை நடத்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு முழு உரிமை உள்ளது. பெண்களுக்கு தர்காவில் தொழுகை நடத்த நிர்வாகம் தடை விதிப்பது பாலின சமநிலையை மீறும் செயலாகும் எனக்கூறியது.
இவ்வழக்கின் போது தர்கா நிர்வாகம் சார்பில்:- தர்காவிற்குள் கூட்டம் அதிகமாக இருக்கும். அங்கு பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறப்பட்டுள்ளது.
எனவே மும்பை ஐகோர்ட் தீர்ப்பை அமுல்படுத்த சிரமம் ஏற்பட்டுள்ளது.