"உலகில் எங்காவது பலவந்த தேசியவாதம் பிரச்சினைகளை, முரண்பாடுகளை தீர்த்திருக்கிறதா?" என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டம் 370 பிரிவு திரும்பப் பெறப்பட்ட நிலையில், இக்கருத்தினை அவர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வகை செய்த அரசமைப்புச் சட்டம் 370 பிரிவை மத்திய அரசு திருத்த மசோதா மூலம் திரும்பப் பெற்றது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாகப்பிரித்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சட்டப்பேரவை கொண்ட யூனியன் பிரதேசமாகவும், லடாக் பகுதியை மத்திய அரசின் கீழ் உள்ளயூனியன் பிரதேசமாகவும் அறிவித்தது.
இந்த மசோதா மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டு, குடியர தலைவரும் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.
மத்திய அரசின் இந்த அதிகாரப் போக்கிற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு கொடிகள் பறக்கின்றன. இதனிடையே ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதல் ஐஏஎஸ் அதிகாரியான ஷா பீஸல், அங்கு நிலவும் சூழல் குறித்து வருத்தத்துடன் பேட்டி அளித்திருந்தார். அதில் 80 லட்சம் மக்கள் கட்டாயமாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள் என வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுகையில்., " ஜம்மு காஷ்மீரின் முதல் ஐஏஎஸ் அதிகாரி ஷா பஸல். ஜம்மு காஷ்மீரில் மத்திய அரசின் செயல்பாடுகளை மிகப்பெரிய துரோகம் என்று குற்றம்சாட்டுகிறார்.
ஷா பாலஸ் கூட இவ்வாறு சிந்தித்தால், ஜம்மு காஷ்மீரில் உள்ள லட்சக்கணக்கான சராசரி மக்கள் என்ன நினைப்பார்கள் என்று சிந்தித்துப்பாருங்கள்?
Has 'muscular nationalism' resolved any conflict anywhere in the world?
— P. Chidambaram (@PChidambaram_IN) August 8, 2019
பலவந்த தேசியவாதத்தின் மூலம் உலகில் எந்த பிரச்சினையாவது தீர்க்கப்பட்டதுண்டா? " என கேள்வி எழுப்பியுள்ளார்.