BSF படைவீரர், சக வீரர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில் 5 பேர் படுகொலை!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு BSF படை வீரர் முகாமுக்குள் தனது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார், இதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 1 வீரர் காயமடைந்தார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 6, 2022, 01:18 PM IST
BSF படைவீரர், சக வீரர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டதில் 5 பேர் படுகொலை! title=

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.  BSF ஜவான் முகாமுக்குள் தனது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 1 வீரர் காயமடைந்தார். இதில் துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ வீரரும் உயிரிழந்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 வீரர்கள் மீது துபாக்கி சூடு

அமிர்தசரஸ் BSF முகாமில், BSF வீரர் ஒருவர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதையடுத்து, துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வீரர்கள் குருநானக் தேவ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 6 வீரர்களில் 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும் படிக்க | கர்நாடக மாநிலத்தின் கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து 10 பேர் பலி

BSF ஜவான் துப்பாக்கி சூடு நடத்தியது ஏன்?

இருப்பினும், BSF ஜவான் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நீதிமன்ற விசாரணை உத்தரவு

இந்த சம்பவம் குறித்து பிஎஸ்எஃப் ஒரு செய்திக்குறிப்பையும் வெளியிட்டுள்ளது, அதில் இந்த விஷயத்தை விசாரிக்க நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்க | கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News