நாடாளுமன்ற குழு முன் 15 நாட்களில் ‘ட்விட்டர்’ தலைமை செயல் அதிகாரி ஆஜராக வேண்டும்

டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி 15 நாள்களில் ஆஜராக நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு சம்மன்

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 11, 2019, 07:39 PM IST
நாடாளுமன்ற குழு முன் 15 நாட்களில் ‘ட்விட்டர்’ தலைமை செயல் அதிகாரி ஆஜராக வேண்டும் title=

சமூக வலைதளங்களை பயன்படுத்தும் இந்திய குடிமக்களின் தகவல் பாதுகாப்பு தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ 15 நாள்களில் ஆஜராக வேண்டும் என நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தெரிவித்துள்ளது.

எம்.பி. அனுராக் தாக்குர் தலைமையிலான நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு பிப்ரவரி 11 ஆம் தேதி ‘ட்விட்டர்’ தலைமை செயல் அதிகாரி நாடாளுமன்ற குழு முன்பு ஆஜராக வேண்டும் எனக்கூறி கடந்த 1 ஆம் தேதி சம்மன் அனுப்பியது. ஆனால் 10 நாட்கள் அவகாசம் கொடுத்தும் ‘ட்விட்டர்’ அதிகாரிகள் ஆஜராகவில்லை. இதுக்குறித்து கூறிய ‘ட்விட்டர்’ நிர்வாகம், தங்களுக்கு போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை எனத்தெரிவித்தது. 

இந்த விசியம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிரொலித்தது. பின்னர் நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு தரப்பில் இருந்து மீண்டும் அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் ‘ட்விட்டர்’ தலைமை செயல் அதிகாரி நேரில் ஆஜராகாத வரை, ட்விட்டர் நிறுவனம் சார்பில் எந்த ஒரு மற்ற அதிகாரிகளை சந்திக்கப்பட மாட்டார்கள் என்று நாடாளுமன்ற குழு தெளிவாக தெரிவித்துள்ளது. எனவே  ‘ட்விட்டர்’ தலைமை செயல் அதிகாரி நேரில் ஆஜாராக 15 நாள் கால அவகாசம் வழங்கியுள்ளது.

Trending News