ஜம்மு விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு

Blast at Jammu Air Force Station: இந்த நிலையத்தில் இரண்டு குண்டுவெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக விமானப்படை ட்வீட் செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 27, 2021, 10:37 AM IST
  • விமானப்படை நிலையத்தில் இரண்டு குண்டுவெடிப்பு
  • ட்ரோன் உதவியுடன் குண்டுவெடிப்பு அச்சுறுத்தல்
  • விமானப்படை அறிக்கை வெளியிட்டது
ஜம்மு விமான நிலையத்தில் அடுத்தடுத்து இரண்டு குண்டுவெடிப்பு title=

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் (Jammu-Kashmir) CRPF பதுங்கு குழி மீது நேற்று மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு விமான நிலையத்தின் (Jammu Airport) தொழில்நுட்ப பகுதியில் நள்ளிரவு இரண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. தடயவியல் குழு மற்றும் நிபுணர்கள் அந்த இடத்தை அடைந்து ஆய்வு செய்தனர். இந்த குண்டுவெடிப்பு (Blast) இரவு இரண்டு மணியளவில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த 5 நிமிட இடைவெளியில் முதல் குண்டுவெடிப்பு மேற்கூரையிலும், இரண்டாவது குண்டுவெடிப்பு தளத்திலும் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. விமான நிலையம் (Jammu-Kashmir) தற்போது பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து மூத்த அதிகாரிகள், காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

ALSO READ | Watch: காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்

இதற்கிடையில், ஜம்மு விமானப்படை நிலையத்தில் இன்றைய சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath Singh) துணை விமானத் தலைவர் ஏர் மார்ஷல் எச்.எஸ்.அரோராவுடன் பேசியுள்ளார். 

விமானப்படை இந்த முக்கிய அறிக்கையை வெளியிட்டது
இந்த நிலையத்தில் இரண்டு லேசான குண்டுவெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக விமானப்படை ட்வீட் செய்துள்ளது. முதல் குண்டுவெடிப்பு மேற்கூரையிலும், இரண்டாவது குண்டுவெடிப்பு தளத்திலும் குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் எந்த ராணுவ வீரரும் காயமடையவில்லை, எந்த உபகரணங்களும் சேதமடையவில்லை, இது குறித்து மேலதிக விசாரணை நடந்து வருகிறது. ஆதாரங்களின்படி, இந்த குண்டுவெடிப்பு ட்ரோன்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

இந்த சம்பவத்திற்குப் பிறகு, பாதுகாப்பு படையினர் சில நிமிடங்களில் அந்த பகுதிக்கு சீல் வைத்தனர். இந்திய விமானப்படை மூத்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளின் உயர் மட்டக் கூட்டம் விமானப்படை தளத்தில் நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. ஜம்மு விமான நிலையம் ஒரு சிவில் விமான நிலையமாகும்.

 

 

ALSO READ | ஜம்மு காஷ்மீருக்கு "உரிய" நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்: அமித் ஷா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News