Jammu Kashmir Landslide: ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு ஆன்மீக யாத்திரை செல்லும் பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பெண் பக்தர்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ஒரு சிறுமி பலத்த காயம் அடைந்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் பாஞ்சி பகுதியில், அதாவது பவான் பகுதியை அடைய மூன்று கிலோ மீட்டர் தூரம் இருக்கும் அந்த பகுதியில் இன்று மதியம் 2.35 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் யாத்திரைக்காக அமைக்கப்பட்டிருக்கும் மேல்நிலை இரும்புக் கட்டுமானம் நிலச்சரிவினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பக்தர்கள் கோயிலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, நிலச்சரிவினால் அந்த இரும்புக் கட்டுமானம் கீழே விழுந்து இரண்டு பெண்கள் உயிரிழந்தனர்.
2 பெண்கள் உயிரிழப்பு
இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு சிறுமி படுகாயமடைந்துள்ளதாகவும் ரீசி மாவட்டத்தின் காவல்துறை துணை ஆணையர் விஷேஷ் பால் மகாஜன் முதற்கட்ட தகவல் அறிக்கையை மேற்கோள்காட்டி கூறினார். மேலும், சம்பவம் நடந்த இடத்தை போலீஸ் உயர் அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்த பிற விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Jammu and Kashmir: Landslide occurred near the Panchi Helipad on the Shri Mata Vaishno Devi Bhawan route. There is a possibility that devotees may be trapped in the landslide. The Mata Vaishno Devi Shrine Board is conducting ongoing relief and rescue operations pic.twitter.com/T6nUHSLUdZ
— IANS (@ians_india) September 2, 2024
துணை ஆணையர் விஷேஷ் பால் மகாஜன் தற்போது கத்ராவுக்குச் செல்கிறார். திரிகூட மலையில் உள்ள சன்னதிக்கு வருகை தரும் பக்தர்களுக்கான அடிப்படை முகாம் கத்ராவில் தான் அமைந்திருக்கிறது. நிலச்சரிவு ஏற்பட்டதும் பிற பயணிகளின் யாத்திரை உடனடியாக நிறுத்தப்பட்டதாகவும், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் மீட்புக் குழு
ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலய பாதையில் பாறைகள் சரிந்து, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் வாரியத்தின் பேரிடர் மேலாண்மை குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர் மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன என்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலய வாரியத்தின் சிஇஓ தகவல் தெரிவித்துள்ளார். கத்ரா மாவட்ட ஆட்சியர் பியூஷ் தோத்ரா கூறுகையில், "நிலச்சரிவில் இரண்டு பேர் உயிரிழந்தனர், ஒருவர் காயமடைந்தார்... இறந்தவர்களின் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறது" என்றார்.
2022ஆம் ஆண்டில் புத்தாண்டு தினத்தன்று, இதே வைஷ்ணோ தேவி ஆலயத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 12 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர்.
மேலும் படிக்க | ஆர்டரை ரத்து செய்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு டெலிவரி செய்யப்பட்ட பிரஷர் குக்கர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ