உச்சதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும் தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால் கர்நாடகாவில் பெருமளவு தண்ணீர் பற்றாக்குறை தீரும் என்று கர்நாடகா தெரிவித்துள்ளது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீர் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2007ம் ஆண்டு கர்நாடகா தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீர் தர வேண்டும் என்று நடுவர் மன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது கர்நாடகாவுக்கு கூடுதலாக 14.75 டிஎம்சி அளவு கூடுதலாக தண்ணீர் எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அளித்திருக்கும் தீர்ப்பு தமிழக விவசாயகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வழங்க உத்தரவிடப்பட்ட 192 டிஎம்சி தண்ணீர் அளவை 177.25 டிஎம்சியாக சுப்ரீம் கோர்ட் குறைத்துள்ளது.
அதேநேரத்தில் கர்நாடகாவுக்கு 280.75 டி.எம்.சி. நீர் வழங்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு காரணமாக தமிழகத்திற்கு 14.75 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவுக்கு ஆதரவான இந்த தீர்ப்பை கர்நாடக மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றத்தின் காவிரி தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாகவும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பின் மூலம் பெங்களூரு நகர குடிநீர் பிரச்சனை தீரும் என்றும் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் வழக்கறிஞர்களிடம் பேசிவிட்டு தனது முழு கருத்தையும் தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதனிடையே சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை இனிப்புகள் கொடுத்து கர்நாடக விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர்.
Karnataka Chief Minister celebrates Cauvery dispute