ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாத தாக்குதல்! புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருவர் பலி

 J&K Terror Attack: ஜம்மு காஷ்மீரின் சோபியானில் நடைபெற்ற கையெறி குண்டுத் தாக்குதலில் 2 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்... இதற்கு காரணமான இம்ரான் கனி என அடையாளம் காணப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி தாக்குதல் நடத்தப்பட்ட சில மணிநேரங்களில் கைது செய்யப்பட்டார்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Oct 18, 2022, 08:31 AM IST
  • கையெறி குண்டுத் தாக்குதலில் 2 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலி
  • தாக்குதல் நடத்திய லஷ்கர் தீவிரவாதி கைது
  • ஷோபியானில் வசிக்கும் இம்ரான் கனியிடம் தீவிர விசாரணை
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர் பயங்கரவாத தாக்குதல்! புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இருவர் பலி title=

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியானில் நடைபெற்ற கையெறி குண்டுத் தாக்குதலில் 2 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்... இதற்கு காரணமான இம்ரான் கனி என அடையாளம் காணப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி தாக்குதல் நடத்தப்பட்ட சில மணிநேரங்களில் கைது செய்யப்பட்டார். தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் உள்ள ஹர்மென் பகுதியில் இன்று அதிகாலை (அக்டோபர் 18 செவ்வாய்க்கிழமை) நடந்த கையெறி குண்டு தாக்குதலில் இரண்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஹர்மைன் ஷோபியானில் வசிக்கும் இம்ரான் கனி என அவர் அடையாளம் காணப்பட்டார்.

வாடகைக்கு தங்கி, அங்கு வேலை பார்த்து வந்த தொழிலாளர்கள் மீது கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய இம்ரான் கனி, தற்போது போலீசாரின் விசாரணை வளையத்தில் உள்ளார். போலீஸ் ஏடிஜிபி விஜய் குமார், விசாரணையின் போது, ​​உத்திரபிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த மோனிஷ் குமார் மற்றும் ராம் சாகர் என இருவர், தொழிலாளர்கள் மீது கையெறி குண்டு வீசியதை ஒப்புக்கொண்டார்.

மேலும் படிக்க | அணு குண்டுவீச தயாராகிறதா ரஷ்யா... அதிகரிக்கும் பதற்றம்!

தடை செய்யப்பட்ட அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் அமைப்பை சேர்ந்தவர்களைத் தேடும்போது, இம்ரான் கனி சுற்றிவளைக்கப்பட்டார் என்றும் போலீசார் தெரிவிக்கின்றனர். பட்டியலிடப்படாத தீவிரவாதிகள், தங்களை மறைத்துக் கொண்டு, எந்த தடயமும் விட்டுவைக்காமல் வழக்கமான வாழ்க்கையில் இருந்துக் கொண்டே நாச வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

தற்போது நடைபெற்ற தாக்குதலில், இம்ரான் கனி என்ற லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மோனிஷ் குமார் மற்றும் ராம் சாகர் ஆகிய இரு தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்” என்று காஷ்மீர் மண்டல காவல்துறை வெளியிட்ட ட்வீட்டர் செய்தியில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தடைசெய்யப்பட்ட #பயங்கரவாத அமைப்பின் கலப்பின #பயங்கரவாதி ஹர்மென் #ஷோபியனைச் சேர்ந்த இம்ரான் பஷீர் கனி கையெறி குண்டுகளை வீசி #ஷோபியான் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலும் #விசாரணை மற்றும் சோதனைகள் நடந்து வருகின்றன” என்று காஷ்மீர் கூடுதல் காவல்துறை இயக்குநர் விஜய் குமார் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன், ஷோபியானின் சௌத்ரி குண்ட் கிராமத்தில் காஷ்மீரி பண்டிட் பூரன் கிரிஷன் பட் என்பவர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | கோவிடிலும் தில்லுமுல்லு செய்த டிரம்ப்! கிடுக்கிப்பிடி விசாரணையில் அமெரிக்க முன்னாள் அதிபர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News