டெல்லியில் காற்று மாசுபாடு மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. டெல்லியை ஒட்டி உள்ள ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலும் பனிமூட்டம் அடங்கிய மாசுபாடான நிலை பரவி காணப்படுகிறது.
வட இந்தியாவில் பல்வேறு இடங்களில் பனிமூட்டம் மற்றும் காசு மாறுபட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் புகைமூட்டம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் வரவிருக்கும் பருவமழை மாசுவை குறைக்க வழிவகுக்கும் என டெல்லி மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
Layer of smog continues to engulf #Delhi, visuals from Akshardham. pic.twitter.com/hxxY6v4R8r
— ANI (@ANI) November 12, 2017
முன்னதாக டெல்லியில் மாசுவினை குறைக்கும் நடவடிக்கையாக மரங்களின் மீது தண்ணீர் தெளித்து தூய்மை படுத்தும் பணி தீவிரப் படுத்தப்பட்டது.
மேலும் மாசுபாட்டில் இருந்து, மாணவர்களை பாதுகாக்கும் முயற்சியாக அவர்களின் நலன் கருதி இன்று நவம்பர் 12-ம் தேதி வரை அரசு பள்ளி, தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது!