Parliament All Party Meeting | India vs Australia | Today News Live Updates: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை (நவ.25) தொடங்க உள்ள நிலையில், அதை முன்னிட்டு அனைத்துக் கட்சிக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதான குழு அறையில் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு தயாராக இருப்பதாக கூறப்படும் நிலையில், அதானி லஞ்ச விவகாரத்தை கையில் எடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இந்த கூட்டத்தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.
மகாராஷ்டிராவில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜக தலைமையிலான ஆளும் மகா யுதி கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. இதில் பாஜக கூட்டணி 235 தொகுதிகளையும், காங்கிரஸ் அங்கும் வகிக்கும் மகா விகாஸ் கூட்டணி 49 தொகுதிகளையுமே கைப்பற்றியுள்ளது. பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றினாலும், இந்த முறை யாருக்கு முதல்வர் பதவி என்ற பேச்சு தற்போது முன்வைக்கப்படுகிறது. சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே (Eknath Shinde) முதல்வராகவே தொடர்வாரா அல்லது பாஜகவின் தேவேந்திர ஃபாட்னாவிஸ் (Devendra Fadnavis) முதல்வர் ஆவாரா என்பது இன்று முக்கியமாக கவனிக்கப்படும் ஒன்றாக இருக்கும்.
பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் (Border Gavaskar Trophy) முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் தற்போது மோதி வருகின்றன. ஜெய்ஸ்வால் சதம் கடந்த நிலையில், இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இவை மட்டுமின்றி இன்றைய அனைத்து செய்திகளின் உடனடி அப்டேட்களையும் இங்கு தெரிந்துகொள்ளலாம்.