2019 ஆம் ஆண்டு லோக் சபா தேர்தல் பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி இருவரும் மீதும் தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்திருக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைப் படி, பிஎஸ்பி தலைவர் மாயாவதி 48 மணிநேரமும், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் 72 மணி நேரமும் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது. இந்த தடை நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் அமல் ஆகும்.
ஏப்ரல் 13-ம் தேதி பிஎஸ்பி தலைவர் மாயாவதி, புளந்த்ஷாஹரில் நடந்த ஒரு தேர்தல் கூட்டத்தின் போது "எங்களுக்கு அலி மற்றும் பஜ்ரங்லி இருவரும் தேவை. ஏனென்றால் அவர்கள் தலித் சமுதாயத்திலிருந்து வந்தவர்கள்" எனக் பேசினார். மேலும் இதற்க்கு சாதி அடையாளம் கூறவில்லை, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களால் அடையாளம் காகாட்டப்பட்டது எனவும் அவர் கூறினார்.
அதே நேரத்தில், காஜியாபாத்தில் நடந்த ஒரு தேர்தல் பேரணியில் உ.பி. முதல்வர் பிரச்சாரம் செய்தபோது, இந்திய இராணுவம் மோடிஜி-யின் இராணுவமாக மாற்றப்பட்டது என அறிவித்தார். முதல்வர் யோகியின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது. எதிர்க்கட்சித் தலைவர்கள் இந்திய இராணுவத்தை யோகி 'அவமானம்' செய்து விட்டார் என குற்றம் சாட்டினர்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசிய யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.