பிரதமர் நரேந்திர மோடி 2019 மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் ஆதரித்து நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் அவரது சொந்த மாநிலமான குஜராத்தின் ஜுனாகார்க் பகுதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக் கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.
அப்பொழுது அவர் பேசியதாவது,
கடந்த 5 ஆண்டுகளாக என்ன வேலைகளை செய்தென் என்பதை குறித்து கூறவே இங்கு வந்திருக்கிறேன். அடுத்த 5 ஆண்டு நான் என்ன செய்யவேண்டுமென்று என்பதை அறிந்துக்கொள்ள நான் இங்கு வந்துள்ளேன். அதை கூறுங்கள். நான் செய்து முடிப்பேன்.
உங்கள் மகன், இந்த காவலாளி செய்த செயல்கள் உங்களுக்கு பெருமையாக உள்ளதா? ஊழலே இல்லாமல் நான் நடத்திய ஆட்சி உங்களை பெருமை படுத்துகிறதா? உங்கள் காவல்காரன் விழிப்புடன் இருகிறார்.
ஏழைக்குழந்தைகளின் உணவுகளை பறித்து தலைவர்களின் வயிற்றை நிரப்புகிறது. காங்கிரஸ் கர்ப்பிணிப் பெண்களுக்கு அனுப்பிய பணத்தை கொள்ளையடித்து வருகிறது. கடந்த 3-4 நாட்களில் காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் இருந்து மூட்டை மூட்டையா பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. மத்தியப் பிரதேசத்தில் ஆட்சி அமைத்து 6 மாதங்களில் காங்கிரஸிடம் இந்த பணம் எங்கிருந்து வந்தது? இந்த பணம் எங்கிருந்து எங்கு போகிறது. முன்னதாக, கர்நாடக மாநிலத்தை ஏடிஎம் இயந்திரமாக மாற்றினார்கள். இப்போது மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை ஏடிஎம் இயந்திரமாக உருவாக்கியுள்ளனர். திருட்டுவதற்காகவே காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறது. காங்கிரஸின் ஊழலுக்கு ஒரு புதிய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தை அகற்றுவது பற்றி மோடி பேசும்போது, மோடியை அகற்றப்படுவதைப் பற்றி காங்கிரஸ் மற்றும் அதன் பங்காளிகள் பேசுகின்றனர். உங்கள் மகனும், காவலாளியுமான என்னை அகராதியில் உள்ள அனைத்து அவதூறான வார்த்தைகளையும் கூறி என்னை பேசி வருகின்றனர். சர்தார் வல்லபாய் படேல் உடன் காங்கிரஸ் குடும்பத்தினர் செய்த துரோகத்திற்கு வரலாறு சாட்சி. சர்தார் சாஹிப் மறந்தவர்கள் தான் காங்கிரஸ்.
இவ்வாறு அவர் பேசினார்.