48 மணி நேரம் பிரசாரம் செய்ய விதித்த தடையை மறுபரிசீலனை செய்யக் கோரிய மாயாவதியின் கோரிக்கையை நிராகரித்தது உச்சநீதிமன்றம்!!
ஏப்ரல் 13-ம் தேதி பிஎஸ்பி தலைவர் மாயாவதி, புளந்த்ஷாஹரில் நடந்த ஒரு தேர்தல் கூட்டத்தின் போது "எங்களுக்கு அலி மற்றும் பஜ்ரங்லி இருவரும் தேவை. ஏனென்றால் அவர்கள் தலித் சமுதாயத்திலிருந்து வந்தவர்கள்" எனக் பேசினார். மேலும் இதற்க்கு சாதி அடையாளம் கூறவில்லை, முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்களால் அடையாளம் காகாட்டப்பட்டது எனவும் அவர் கூறினார்.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறுகையில், “நான் தேர்தல் பிரச்சாரம் செய்ய 48 மணி நேரம் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது ஜனநாயகமற்ற நடவடிக்கை. வரலாற்றில் இது கருப்பு நாளாக இருக்கும். என் மீது நடவடிக்கை எடுத்துள்ள தேர்தல் ஆணையத்திற்கு உண்மையாக தேர்தல் நடத்தை விதகளை மீறும் மோடி மற்றும் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை. ராணுவத்தை பயன்படுத்தி மோடி வாக்கு சேகரித்து வருகிறார். அமித்ஷா குறிப்பிட்ட சமூகத்தின் மீது வெறுப்புணர்வை பரப்பி வருகிறார். ஆனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு துணிவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு தலித்களுக்கு எதிரான மனநிலையே காட்டுகிறது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையம் வித்த தீர்ப்பை எதிர்த்து, 48 மணி நேரம் பிரசாரம் செய்ய விதித்த தடையை மறுபரிசீலனை செய்யக் கோரிய மாயாவதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் இது குறித்து உச்சநீதிமன்ற்றன் கூறுகையில், "ஒரு தனி மனுவைத் தாக்கல் செய்யுங்கள், இப்போது நாங்கள் கேட்க முடியாது, இப்போது இதை தெளிவுபடுத்த நாங்கள் இல்லை."
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள டீபொண்டில் ஒரு தூண்டுதலாக உரையாற்றிய மாவீரர் நடத்தை முறையை மீறியதாக மாயாவதி குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர், திங்கள்கிழமை 48 மணி நேர தடை விதிக்கப்பட்டது.
Supreme Court also refuses to consider BSP chief Mayawati’s plea against Election Commission’s ban to address public rallies for 48 hours. https://t.co/CmZspGkKze
— ANI (@ANI) April 16, 2019
உத்தரபிரதேசத்தில் உள்ள SP-BSP-RLD கூட்டணியை உறுதியாக ஆதரித்து நிற்காமல், காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கக்கூடாது என்று மாயாவதி முஸ்லிம் சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்தார்.