காங்கிரஸ் கட்சியில் இணையும் முக்கியத் தலைவர்கள்... “இந்தி பெல்ட்டில்” மாறும் காட்சி

Bihar Lok Sabha Election: பீகார் மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக பார்க்கப்படும் பப்பு யாதவ் தனது கட்சியை காங்கிரசுடன் இணைந்தார். மேலும் மக்களவைத் தேர்தலில் பூர்னியா தொகுதியில் போட்டியிடுகிறார் எனத்தகவல். 

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 20, 2024, 04:50 PM IST
காங்கிரஸ் கட்சியில் இணையும் முக்கியத் தலைவர்கள்... “இந்தி பெல்ட்டில்” மாறும் காட்சி title=

Pappu Yadav Join Congress: பீகார் மக்களவைத் தேர்தல் 2024: மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதனையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு இடையே கட்சி மாற்றம், தலைவர்கள் மாற்றம் என அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. இன்று (புதன்கிழமை) பீகார் மாநிலத்தின் முக்கிய அரசியல் தலைவராக பார்க்கப்படும் பப்பு யாதவ் தனது கட்சியை காங்கிரசுடன் இணைந்தார். அதாவது பப்பு யாதவின் ஜன் அதிகார் கட்சி காங்கிரசுடன் இணைந்தது. இதனையடுத்து பீகாரின் பூர்னியா தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறார் எனத் தகவல். 

பப்பு யாதவ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

லோக்சபா தேர்தலுக்கான சீட் பங்கீட்டிற்கு முன், பப்பு யாதவ் முக்கிய முடிவை எடுத்துள்ளார். பப்பு யாதவின் மனைவி ரஞ்சிதா ரஞ்சன் ஏற்கனவே காங்கிரஸில் ராஜ்யசபா எம்பியாக உள்ளார். பீகாரில் தொகுதி பங்கீடு தொடர்பாக இந்தியா கூட்டணி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இங்கு காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி இடையே தொகுதி பங்கீடு பேச்சுவாரத்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

மேலும் படிக்க - மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 10 தொகுதிகள் அறிவிப்பு

பீகாரில் காங்கிரசுடன் இணைந்த கட்சிகளும் பலம் பெறும் -மோகன் பிரகாஷ்

காங்கிரஸ் கட்சியுடன் தனது கட்சியை இணைக்க வந்த பப்பு யாதவுடன் அவரது மகன் சர்தக் யாதவும் உடன் வந்திருந்தார் மற்றும் பிகார் காங்கிரஸ் பொறுப்பாளர் மோகன் பிரகாஷ் இருந்தார்.

இதுக்குறித்து மோகன் பிரகாஷ் கூறுகையில், "ஒன்றுமை நீதியால் ஈர்க்கப்பட்ட பப்பு யாதவ் காங்கிரசுடன் இணைய முடிவு செய்துள்ளார். பப்பு யாதவ் வருகையால், பீகாரில் காங்கிரசுடன் இணைந்த கட்சிகளும் பலம் பெறும்" என்றார்.

எனது சித்தாந்தம் காங்கிரஸ் சித்தாந்தம் ஒன்றாக இருக்கிறது -பப்பு யாதவ்

காங்கிரஸில் இணைந்த பிறகு, பப்பு யாதவ் பேசுகையில், "பீகாரில் பிராந்தியக் கட்சி ஆட்சியில் இருந்திருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். நீதி மற்றும் சேவைக்கான போராட்டங்களின் நீண்ட பட்டியல் எங்களிடம் உள்ளது. எங்கள் கட்சி சேவை, நீதி மற்றும் போராட்டத்திற்கு பெயர் பெற்றது. எங்கள் சித்தாந்தம் காங்கிரஸின் சித்தாந்தமும் ஒன்றாக இருக்கிறது. நமது அரசியல் மதச்சார்பற்றது. ஒவ்வொரு சூழ்நிலையிலும் மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்த வரலாறு எங்களுக்கு உண்டு. சர்வாதிகாரிக்கு (பிரதமர் மோடி) எதிராக கார்கேஜி வலுவாக குரல் கொடுத்தவர்" என்றார். மேலும் அவர் கூறுகையில், வீர் குன்வர் மற்றும் ஷெர்ஷா சூரி ஆகியோரை நினைவு கூர்ந்தார். அவர்களையும் சந்தித்திருந்தேன். மோகன் பிரகாஷ் சமாஜ்வாடி முதல் பழைய ஜனதா தளம் வரை அனைவருடனும் தொடர்பு கொண்டிருந்தார். அவர் தான் எனக்கு ஒரு வலுவான சித்தாந்தம் என்றார்.

பகுஜன் சமாஜ் கட்சி டேனிஷ் அலி காங்கிரசில் இணைந்தார்

அதேபோல கடந்த லோக்சபா தேர்தலில் உ.பி.யில் உள்ள அம்ரோஹா தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டேனிஷ் அலி, காங்கிரசில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் அவர் அம்ரோஹாவில் வேட்பாளராக நிறுத்தப்படலாம்.

பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு எப்பொழுது?

பீகாரிலும் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும். மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், 2வது கட்டம் ஏப்ரல் 26ம் தேதியும், மூன்றாம் கட்டம் மே 7ம் தேதியும், நான்காம் கட்டம் மே 13ம் தேதியும், ஐந்தாம் கட்டம் மே 20ம் தேதியும், ஆறாவது கட்டம் மே 25ம் தேதியும், ஏழாவது கட்டம் ஜூன் 1ம் தேதியும் நடைபெறும். மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும்.

மேலும் படிக்க - 'கண்ணீர்விட்டு கதறினார்...' காங்கிரஸ் டூ பாஜக சென்ற தலைவர் - மறைமுகமாக தாக்கிய ராகுல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News