வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரியிடம் அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் முக்கிய தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, சில தினங்களுக்கு முன் மத்திய அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்தது.
இந்த மசோதா மூலம் தேர்தல் ஆணையத்திற்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கும். மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தேர்தல் சீர்திருத்த மசோதாவில், ஆதார் எண்ணுடன் (Aadhaar Card) வாக்காளர் அடையாள அட்டையை (Voter ID) இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.எனினும், இந்த இணைப்பு கட்டாயமாக்கப்படாது. இந்த இணைப்பு தனிநபர் விருப்பத்திற்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நபர் வெவ்வேறு முகவரிகளில் வாக்காளர் அடையாள அட்டையை பெறுவதை தடுக்கும் வகையில் ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு செயல்படும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வங்க தேசத்திற்கு அரசு முறை பயணம்
வாக்குப்பதிவு தற்போது பள்ளி, கல்லூரி கட்டிடங்களில் நடைபெற்று வரும் நிலையில், இனி தேர்தல் ஆணையம், தேதலுக்கான வாக்குபதிவை நடத்த எந்த கட்டிடத்தையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளலாம் என்பது இந்த மசோதாவில் உள்ள மற்றொரு முக்கிய அம்சமாகும். எனவே, திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள்,என எந்த ஒரு கட்டிடத்தையும் தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டு அங்கு தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கும் வகையில் இந்த தேர்தல் சீர்திருத்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் ஆண்டுக்கு ஒரே ஒரு முறை மட்டுமே தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், இனி 18 வயது நிரம்பிய நபர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் இணைக்க ஆண்டில் 4 முறை வாய்ப்புகள் வழங்கப்படும்.
இந்த தேர்தல் சீர்திருத்த மசோதா நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே, தாக்கல் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | மத்திய அரசின் சார்தாம் சாலை திட்டத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR