லக்னோ: பாஜக ஆளும் உத்தரபிரதேசம் மாநிலம் வலுக்கட்டாயமான மத மாற்றங்களைத் தடுக்க ஒரு சட்டத்தை இயற்றிய இந்தியாவின் முதல் மாநிலமாக திகழ்கிறது. மத மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் "லவ் ஜிகாத்"-க்கு எதிராக யோகி ஆதித்யநாத் அமைச்சரவை கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் (Governor Anandiben Patel) இன்று (சனிக்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளார்.
இஸ்லாமியர்கள் திட்டமிட்டு இந்து பெண்களை மதம் மாற்றி திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று குற்றம்சாட்டிய சங் பரிவார், இதற்கு "லவ் ஜிகாத்" (Love Jihad) என பெயரிட்டது. பலவந்தமான கட்டாயப்படுத்தி ஏமாற்றி அல்லது ஆசை வார்த்தைகள் மூலம் நடைபெறும் மத மாற்றங்களை தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என இந்து அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து பாஜக (BJP) ஆளும் மாநிலங்களில் "லவ் ஜிகாத்" எதிராக புதிய சட்டம் கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
ALSO READ | லவ் ஜிஹாதிற்கு எதிரான சட்டம் அரசியலமைப்பிற்கு எதிரானது: அசாதுதீன் ஒவைசி
அந்தவகையில், "லவ் ஜிகாத்" சட்டத்தை மாநிலத்தில் விரவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய பிரதேச அரசு அறிவித்திருந்தது. இந்தநிலையில், உத்தரபிரதேசம் (Uttar Pradesh) மாநிலம் வலுக்கட்டாயமான மத மாற்றங்களைத் தடுக்கவும் விதமாக லவ் ஜிகாத் எதிராக புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அரியானா மாநிலத்திலும் சட்டம் கொண்டுவரப்படும் எனவும் பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath) அமைச்சரவை கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் ஒப்புதல் அளித்துள்ள நிலையில், சட்டத்தின் படி, வலுக்கட்டாயமான மத மாற்றங்களை மேற்கொண்டார் என நிரூபிக்கப்பட்டால் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
ALSO READ | Love Jihad: அசாதுதீன் ஒவைசிக்கு கடுமையாக பதிலடி கொடுக்கும் கிரிராஜ் சிங்
முன்னதாக "லவ் ஜிஹாத்" ஐ கட்டுப்படுத்த எங்கள் அரசாங்கம் செயல்படும், நாங்கள் ஒரு சட்டத்தை கொண்டுவருவோம். தங்கள் அடையாளத்தை மறைத்து, பெண்களை ஏமாற்றும் நபர்களை நான் எச்சரிக்கிறேன். நீங்கள் உங்களை திருத்திக் கொள்ளாவிட்டால், தண்டிக்கப்படுவீர்கள் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath) கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR