'கங்குலியை தூக்கியதற்கு இழப்பீடா இத பண்ணுங்க' - பிரதமரிடம் மம்தா...

சௌரவ் கங்குலி, பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அந்த விவகாரம் குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Oct 17, 2022, 07:38 PM IST
  • சௌரவ் கங்குலியின் பதவி பறிக்கப்பட்டுள்ளது - மம்தா பானர்ஜி
  • ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலியை போட்டியிட அனுமதிக்க வேண்டும் - மம்தா பானர்ஜி
  • ஐசிசி தலைவர் வேட்புமனு தாக்கல் அக். 20ஆம் தேதி தொடங்குகிறது.
'கங்குலியை தூக்கியதற்கு இழப்பீடா இத பண்ணுங்க' - பிரதமரிடம் மம்தா...  title=

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக இருந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சௌரவ் கங்குலி, அதன் பொறுப்பில் இருந்து விலகினார். அவரை அடுத்து, இந்திய அணியின் மூத்த வீரர் ரோஜர் பின்னி, பிசிசிஐ தலைவராக நாளை (அக். 18) பொறுப்பேற்கிறார்.

தொடர்ந்து, அவரிடம் கங்குலி நாளை தனது பொறுப்பை ஒப்படைக்கிறார். மேலும், ஐசிசியில், அதன் பிரதிநிதியை பிசிசிஐ நாளை முடிவு செய்ய உள்ளது. இந்நிலையில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

கொல்கத்தா விமான நிலையத்தில் மம்தா பானர்ஜி செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"கங்குலியை வெளியே அனுப்பியது நியாமில்லை. அது தவறானது, மிகவும் வருத்தம் அளிக்கிறது. 

அவர் பதவியில் இருந்து இறக்கப்பட்டுள்ளார். எதற்காக அவரின் பதவி பறிக்கப்பட்டது? என்ன தவறு செய்தார் அவர்? இது அனைவருக்கும் தெரியும். பெங்கால் மட்டுமல்ல அனைவரும் கங்குலி நினைத்து பெருமை கொள்கிறார்கள். அவர் வங்கத்தின் தாதா மட்டுமல்ல, அண்ணன், தம்பி எல்லாம்தான். அவர் நம் நாட்டிற்கும், ஏன் உலகத்திற்கே பெருமை. 

மேலும் படிக்க | பிசிசிஐ-ல் இருந்து வெளியேறிய பிறகு சவுரவ் கங்குலி எடுத்த முக்கிய முடிவு!

அனைவருக்கும் அவரை தெரியும். கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளிலும் அவர் பரிட்சயப்பட்டவர். பலருடன் அவர் பணியாற்றியுள்ளார். அவர் ஒரு பெரிய பிரபலம். அதனாலா அவருடயை பதவி பறிக்கப்பட்டது? மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. https://zeenews.india.com/tamil/topics/banerjee

ஐசிசி பதவியில் ஒருவரே அல்லது இருவரோ தேர்வாகலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில், நான் பிரதமருக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோளை விடுக்கிறேன். ஐசிசி தேர்தலில் கங்குலியை போட்டியிட வைக்க வாய்ப்பளிக்க வேண்டும்" என்றார். ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்தல் வேட்புமனு தாக்கல் வரும் அக்.20ஆம் தேதி நடைபெற இருக்கிறது.  

தொடர்ந்து பேசிய மம்தா,"சௌரவ் கங்குலி மற்றும் ஜெய் ஷா ஆகியோருக்கு இரண்டாவது முறையாக பதவியில் நீட்டிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் ஏன் என்று தெரியவில்லை, அமித்ஷாவின் மகன் மட்டும் இருக்கிறார். ஜெய் ஷா மீது குற்றஞ்சாட்டவில்லை. ஆனால், கங்குல் மட்டும் ஏன் வெளியேற வேண்டும்?. அவர் வெளியேற்றப்பட்டது அநீதியானது. அதற்கு இழப்பீடு ஐசிசி ஒன்றுதான். பிசிசிஐயில் இருந்து பலரும் ஐசிசி சென்றுள்ளனர்.  

இதனை பழிவாங்கும் நோக்கில் அல்லது அரசியல் ரீதியாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என நான் அரசிடம் கேட்டுக்கொள்கின்றேன். அவர் அரசியல் கட்சி உறுப்பினர் அல்ல. கிரிக்கெட்டுக்காக, விளையாட்டுக்காக இந்த ஒரு முடிவை எடுங்கள்" வற்புறுத்தியுள்ளார். 

மேலும் படிக்க | T20 World cup: ஒரே ஓவரில் மேட்சை மாற்றிய ஷமி; விராட் கோலியின் அபார கேட்ச் - இந்தியா வெற்றி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News