300 ரூபாய் பொருளுடன் 19,000 ரூபாய் பொருளையும் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது அமேசான் நிறுவனம்...!
ஜோஷ் மென்பொருள் நிறுவனத்தின் இயக்குனரான கௌவுதம் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் அமேசானில் ஆன்லைன் ஷாப்பிங் செய்தது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவு இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஏனென்றால், கௌவுதம் அமேசான் மூலம் 300 ரூபாய் மதிப்பிலான தோல் லோஷன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அதற்கு பதிலாக அவருக்கு கிட்டத்தட்ட 19,000 ரூபாய் மதிப்புள்ள போஸ் ஹெட்போன் கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் அமேசான் வாடிக்கையாளர் மையத்தில் தெரிவித்த நிலையில், அவர்கள் ஒரு முறை டெலிவரான பொருளை திரும்பி வாங்க மாட்டோம் என்றும், அதனால் அதை திருப்பி அனுப்பாமல் தாங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளது.
Congratulations. I had a similar experience as well. The bounty wasn't in the same league as yours though. https://t.co/3DWO8xRdZB
— Debashis Tripathy (@deba1602) June 11, 2020
இதனால் வினோதமான இந்த ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு சில மணி நேரங்களில் வைரலானது.300 ரூபாய் பொருள் ஆர்டர் செய்த இடத்தில் 19,000 கிடைத்ததால் பலர் தங்களுக்கு இப்படி நடக்காதா என வேதனையுடன் கமெண்ட் செய்தனர். இன்னும் சிலர், தாங்கள் விலை மதிப்புள்ள பொருட்களை ஆர்டர் செய்த போது அதற்கு பதில் தவறுதலாக வேறு பொருட்கள் மிகக் குறைந்த விலையில் கிடைத்ததாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.
அதே போல், ஒருவர் நான் போஸ் ஹெட்போன் ஆர்டர் செய்தேன். ஆனால் அதற்கு பதிலாக தோல் லோஷன் கிடைத்துள்ளது. நாம் பரிமாறிக் கொள்ளலாமா என கேட்டுள்ளார். ஆனால், அமேசான் இதை எப்படி ஈடு செய்து கொள்ளும் என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.
READ | மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,000 ரொக்கம் வழங்க முதல்வர் உத்தரவு
அமேசான் இந்தியா தனது இணையதளத்தில் அதன் வருவாய் கொள்கையை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. ஆன்லைன் சில்லறை விற்பனையாளர் கூறுகிறார், “Amazon.in-ல் பட்டியலிடப்பட்டுள்ள விற்பனையாளர்களிடமிருந்து வாங்கப்பட்ட பெரும்பாலான பொருட்கள் திரும்பப் பெறக்கூடியவை என்று வெளிப்படையாக அடையாளம் காணப்பட்டவை தவிர, திரும்பும் சாளரத்திற்குள் திரும்பப் பெறக்கூடியவை” என்று அமேசான் வலைத்தளம் கூறுகிறது.
தோல் மற்றும் சுகாதார தயாரிப்புகளின் கீழ், இதுபோன்ற பொருட்கள் சுகாதாரம் / உடல்நலம் மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு / ஆரோக்கியம் / உற்பத்தியின் நுகர்வு தன்மை ஆகியவற்றால் திரும்பப் பெறமுடியாது.