MeToo புகார் விவகாரம் தொடர்பாக மூத்த நீதிபதி, சட்ட வல்லுநர் கொண்டு குழு அமைத்து விசாரிக்க பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகம் முடிவு..!
பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள், சமூக வலைதளங்களில் #MeToo இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்கி, பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், “ நானும் பாதிக்கப்பட்டேன்” என பொருள்படும் #MeToo என்ற விழிப்புணர்வு பிரசாரம் இணைய தளத்தில் பரவி வருகிறது. இதில் தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் உள்ளிட்ட பலரும் சம்பந்தப்பட்டுள்ளனர். சமீபத்தில் நானா படேகருக்கு எதிராக தனுஸ்ரீ தத்தா அளித்திருக்கும் புகார்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த விவகாரம் பெரிதானதை தொடர்ந்து மத்திய அரசுக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
இதை தொடர்ந்து, மத்திய வெளியுறவு இணையமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு எதிராக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் அக்பர் பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், #MeToo என்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் அளிக்கப்பட்டிருக்கும் புகார்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதிகளை கொண்ட கமிட்டி அமைக்கப்படும் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. #MeToo பிரிவின் அமைச்சராக மேனகா காந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
The committee will look into the legal & institutional framework which is in place for handling complaints of #SexualHarassmentAtWork and advise the
Ministry on how to strengthen these frameworks.#MeTooIndia #DrawTheLine— Ministry of WCD (@MinistryWCD) October 12, 2018
#MeToo பிரசாரம் குறித்து அவர் அளித்திருந்த பேட்டியில், விழிப்புணர்வு பிரசாரத்தில் 10-15 வயதுடையோருக்கு ஆதரவாகவும் குரல் எழுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
#MeToo குறித்த பிரசாரம் முதன்முறையாக ஹாலிவுட்டில் தான் தொடங்கியது. ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டன் தான் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகார்கள் அளிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார். அதன்பின்னர், தொடர்ச்சியாக இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.