புதுடெல்லி இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று (ஜன.,31) முதல் "கெலோ இந்தியா ஸ்கூல் விளையாட்டுகள்" நடைப்பெறுகிறது. இந்நிகழ்ச்சியினை பிரதமர் மோடி துவங்கிவைத்து உரையாற்றினார்!
இந்தியாவில் விளையாட்டு வீரர்களை ஆரம்ப புள்ளியில் கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து விளையாட்டு துறையினை வளர்பதன் ஒரு முயற்சியாகவும் கெலோ விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவில் அனைத்து விளையாட்டுக்களுக்கும் ஒரு வலுவான கட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்த கெலோ ஆதாரமாய் அமையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்த கெலோ விளையாட்டுகளில் பங்கேற்பதற்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பள்ளி இளம் மாணவர்கள் பங்கேற்கவுள்ளனர். அவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதற்கும், அவர்களை எதிர்கால விளையாட்டு சாம்பியன்களாக மாற்றுவதற்கும் இந்த விளையாட்டு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கெலோ விளையாட்டுகள் இன்று (ஜன.,31-2018) துவங்கி வரும் பிப்ரவரி 8-ஆம் நாள் வரை நடைப்பெறுகிறது.
இந்த விளையாட்டுகளில் 17-வயதுகுட்பட்டவர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும் 16 துறைகளில் போட்டிகள் நடைப்பெறவுள்ளது. அவை வில்வித்தை, தடகள, பேட்மின்டன், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, ஜூடோ, கபாடி, கோ-கோ, படப்பிடிப்பு, நீச்சல், கைப்பந்து, பளு தூக்குதல் மற்றும் மல்யுத்தம் ஆகியன ஆகும்.
Not just more medals. But more playing!
Khelo India is not only about winning medals. It is an effort to give strength to a mass movement for playing more. We want to focus on every aspect that would make sports more popular across India: PM Shri @narendramodi Ji. #KheloIndia pic.twitter.com/OZ6zmNXyLg— Khelo India (@kheloindia) January 31, 2018
இந்நிலையில் இன்று இந்த கெலோ விளையாட்டுகளை பிரதமர் மோடி துவங்கிவைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர் "இந்த விளையாட்டு பதக்கங்களை மையப்படுத்தி நடத்தப்படவில்லை, நாட்டின் விளையாட்டு துறையினை வளர்ச்சியடைய செய்யும் முயற்சியின் ஆரம்பம்" என தெரிவித்துள்ளார்!