புது டெல்லி: கொரோனா தொற்று வைரஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த செய்தியை பகிர்ந்துக்கொண்ட அமைச்சர் ஸ்மிருதி இரானி (Smriti Irani), "கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தங்களை "விரைவாக" கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் சனிக்கிழமை பாரதிய ஜனதா கட்சி சார்பில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தனது தேர்தல் பேரணியின் போது, "தீவன ஊழல் செய்தவர்களுக்கு: மாநிலத்தின் சுயமரியாதை கொண்ட மக்களிடையே செல்வாக்கு கிடையது என்று மத்திய அமைச்சர் வலியுறுத்தினார்.
ALSO READ | வெறும் பள்ளி படிப்பை மட்டும் முடித்தாரா ஸ்மிருதி இராணி?...
இதுவரை பீகார் சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்த மற்ற முக்கிய தலைவர்களில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர்கள் ராஜ் பப்பர் மற்றும் சத்ருகன் சின்ஹா, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோர் அடங்குவர். வளர்ந்து வரும் CPI நட்சத்திரம் கன்ஹையா குமாரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால், பாஜக தனது தேர்தல் அறிக்கையை, அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்குவதாக" மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுக்கான், கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா உள்ளிட்டோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர் குறிப்பிடத்தக்கது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR