இந்த ஆண்டின் "டைம்" இதழின் சிறந்த மனிதர் பட்டியலில் மோடி முன்னிலை!!

இந்த வருடம் நடத்திய பிரபல ஆங்கில பத்திரிக்கை ''டைம்" 2016-ம் ஆண்டின் சிறந்த மனிதர் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி முன்னிலை வகிப்ப்பதாக தெரிவித்துள்ளது. 18% வாக்குகளுடன் பிரதமர் மோடி, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், அதிபர் ஒபாமா மற்றும் ஜூலியன் அசாங்கே ஆகியோர்களை பின்னுக்கு தள்ளினார்.

Last Updated : Dec 5, 2016, 03:25 PM IST
இந்த ஆண்டின் "டைம்" இதழின் சிறந்த மனிதர் பட்டியலில் மோடி முன்னிலை!! title=

நியூயார்க்: இந்த வருடம் நடத்திய பிரபல ஆங்கில பத்திரிக்கை ''டைம்" 2016-ம் ஆண்டின் சிறந்த மனிதர் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி முன்னிலை வகிப்ப்பதாக தெரிவித்துள்ளது. 18% வாக்குகளுடன் பிரதமர் மோடி, புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், அதிபர் ஒபாமா மற்றும் ஜூலியன் அசாங்கே ஆகியோர்களை பின்னுக்கு தள்ளினார்.

இந்த வருடத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றிருந்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் (2%), அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் (4%) ஆகியோரையும் பின்னுக்குத் தள்ளி வெற்றி பெற்றுள்ளார் மோடி.

இப்பட்டியலில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே, சீனத் தலைவர் ஸி ஜின்பிங், வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன், எப்பிஐ தலைவர் ஜேம்ஸ் கோமி, ஆப்பிள் நிறுவன சிஇஓ டிம் குக் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

மோடி கடந்த 8-ம் தேதி கருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லது என அறிவித்ததோடு, இணையதள வழியாக பணப்பரிவர்த்தனை அதிகரித்ததால், உலகின் பெரும்பாலானோரால் முன்னிலை பெற்றுள்ளார். 

நரேந்திர மோடி நடத்திய சர்வேவில் ரூபாய் நோட்டுக்கு தடை விதித்த மோடியின் செயலுக்கு, நரேந்திர மோடி ஆப்-பில் கருத்து தெரிவித்தவர்களில் 90 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். 

2014-ம் ஆண்டிலும் டைம் நடத்திய இதே கருத்துக்கணிப்பில் அந்தாண்டுக்கான மனிதராக மோடி தேர்வு செய்யப்பட்டார். 'டைம்' பத்திரிகை டிசம்பர் 7-ம் தேதியன்று, 2016-ம் ஆண்டின் செல்வாக்கான மனிதரைத் தேர்ந்தெடுக்கும்.

Trending News