சமூக ஊடகங்கள் வாயிலாக போலி செய்திகள் பரப்பப்படுவதையும் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிராக சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்படுவதையும் தடுக்கும் நோக்கில், சமூக ஊடகங்கள் OTT தளங்களுக்கான புதிய வழிகாட்டு விதிமுறைகளை (New IT Rules) கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இந்த விதிகளை பின்பற்றுவது தொடர்பாக சமூக ஊடகங்களுக்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டது.
மே மாதம் 26ம் தேதி அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விதிகளுக்கு ட்விட்டரை தவிர அனைத்து சமூக ஊடகங்களும் இணங்கியுள்ள நிலையில், ட்விட்டர் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் குறித்து ஐநா மனித உரிமைகள் கவுன்சில் கவலை தெரிவித்துள்ளதற்கு இந்தியா சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இந்தியாவின் நிரந்தர மிஷன் எழுதிய பதில் கடிதத்தில், இந்தியாவின் ஜனநாயக ஆதார சான்றுகள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதை இந்தியாவின் நிரந்தர இயக்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது என குறிப்பிட்டுள்ளது.
மேலும், அந்த கடிதத்தில், “புதிய ஐடி விதிகளின் வரைவு விதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக மின்னணு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஆகியவை கடந்த 2018-ஆம் ஆண்டு தனிநபர்கள், பொதுமக்கள், தொழில்துறை சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஆலோசனை செய்ததோடு, இது தொடர்பான பல துறைகளையும் ஆலோசனையில் ஈடுபடுத்தியது.அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்த பிறகு அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப விதிகள் இறுதி செய்யப்பட்டன.
பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையை இந்திய அரசியலமைப்பு உறுதிசெய்துள்ளது. தனித்து இயங்கும் நீதித்துறை மற்றும் ஊடகம் ஆகியவை இந்தியாவின் ஜனநாயகக் கட்டமைப்பின் அங்கமாக விளங்குகின்றன என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் தளங்கள் மற்றும் பிற செயலிகளில் சிறுவர் ஆபாசப் படங்கள் மற்றும் மோசமான உள்ளடக்கங்களை அகற்ற தேவையான வழிகாட்டுதல்களை வடிவமைக்க இந்திய உச்சநீதிமன்றம் இரண்டு தீர்ப்புகளில் உத்தரவிட்டுள்ளதை பற்றி குறிப்பிட்டுள்ளது. சமபந்தப்பட்ட வழக்கில், ஆபாசமான, வன்முறையை தூண்டும் வகையிலான உள்ளடக்கங்களை யார் பகிர்கிறார்கள், எங்கிருந்து தொடங்குகின்றன என்பதை அறியும் ஒரு அமைப்பு கட்டாயம் தேவை என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதை பற்றி இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ALSO READ | சமூக ஊடகங்கள், டிஜிட்டல் மீடியா, OTT-க்கான புதிய விதிகள்.. முக்கிய தகவல்கள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR