தலைநகர் டெல்லியில் காற்று மாசு, இன்று மீண்டும் மோசமான நிலைக்குச் செல்லும், என மத்திய காற்றுத்தரம் மற்றும் தட்பவெப்ப ஆய்வு அமைப்பு தகவல்!
டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று காலை காற்றின் தரக் குறியீடு (AQI) 312 ஆக 'மிக மோசமான' நிலையை எட்டியுள்ளது. தலைநகர் டெல்லியில் (Delhi Air Pollution) நாளுக்கு நாள் காற்றின் மாசு அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. காற்று மிகவும் மோசமடைந்து ஆபத்து அளவை எட்டி இருக்கிறது. தற்போது டெல்லி (Delhi) மக்கள் காற்றை சுவாசிக்க முடியாமல் திணறி வருகின்றனர். உலகிலேயே காற்று மாசு அதிகமாக இருக்கும் நகரமாக டெல்லி உருவெடுத்துள்ளது. கடந்த சில தினங்களாக டெல்லியில் மாசு கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணறும் நிலை உருவாகி உள்ளது. இதனால் சாலை விபத்துக்கள், ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (CPCB) கருத்துப்படி, டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு இன்று காலை 312 ஆக பதிவாகியுள்ளது. டெல்லி-NCR-ல் காற்றின் தரம் அடுத்த இரண்டு நாட்களில் அதிகரித்து 'கடுமையாக நிலைக்கு மாறும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லோதி சாலையில் 297 (மோசமான நிலை) மற்றும் ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தை சுற்றியுள்ள பகுதியில் நண்பகல் இரண்டு மணிவரை காற்றின் தர குறியீட்டு 346 (மிகவும் மோசமான நிலை) இருந்தது. தலைநகரில் காற்றின் தரம் மோசமடைய முக்கிய காரணம் இரண்டு காரணிகளால் கூறப்படுகிறது - டெல்லியில் அமைதியான மேற்பரப்பு காற்று மாசுபடுவதைத் தடுக்க வாய்ப்புள்ளது மற்றும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது தீ விபத்துக்களின் எண்ணிக்கை கணிசமாக (சுமார் 1,000) அதிகரித்துள்ளது. 51-100 வரையிலான AQI 'நடுநிலையான' பிரிவில் உள்ளது. 101-200 'மிதமான' பிரிவில் உள்ளது. 201-300 மோசமான' என்றும், 301-400 'மிகவும் மோசம்' என்றும் 401- 500' அபாயகரமான' பிரிவில் உள்ளது.
டெல்லி NCR-ன் காற்று மாசுபாடு
1. டெல்லி - 312 (மிகவும் மோசமான நிலை)
பூசா - 297 (மோசமான நிலை)
லோதி சாலை - 308 (மிகவும் மோசமான நிலை)
டெல்லி பல்கலைக்கழகம் - 322 (மோசமான நிலை)
விமான நிலையம் (டி 3) -314 (மிகவும் மோசமான நிலை)
மதுரா சாலை -310 (மிகவும் மோசமான நிலை)
அயனகர் - 302 (மிகவும் மோசமான நிலை)
IIT டெல்லி - 309 (மிகவும் மோசமான நிலை)
திர்பூர் - 327 (மிகவும் மோசமான நிலை)
சாந்தினி சௌக் - 428 (கடுமையான நிலை)
2. நொய்டா - 361 (மிகவும் மோசமான நிலை)
3. குருகிராம் -174 (மிதமான நிலை)
4. மும்பை -199 (மிதமான நிலை)
5. நவி மும்பை -239 (மோசமான நிலை)
6. புனே -162 (மிதமான நிலை)
7. அகமதாபாத் -141 (மிதமான நிலை)
8. காசியாபாத் - 413
9. கிரேட்டர் நொய்டா -378
10 ஹிசார் - 372
11. ஜிந்த் -342
12. கான்பூர் - 359
13. லக்னோ - 322
14. மீரட் - 331
15. மொராதாபாத் -336
16. முசாபர்பூர் -344
17. பல்வால் -307
18. பானிபட் - 362
19. ரோஹ்தக் -304
20.யமுநகர் -315
21. பாக்பத் -336
22. ஃபரிதாபாத் -341
23. அமிர்தசரஸ் - 240
24. அம்பாலா -251