காங்கிரஸ் தங்களுக்கு உதவினால் அயோத்தியில் ராமர் கோவில் எளிதாக அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் உமா பாரதி தெரிவித்துள்ளார்!
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட தடையாக இருப்பது காங்கிரஸ் கட்சி தான் எனவும், காங்கிரஸ் கட்சி தங்களுக்கு உதுவும் பட்சத்தில் எளிதாக ராமர் கோவில் கட்டப்படும் என உமா பாரதி தெரிவித்துள்ளார். மேலும் மக்களிடையே வன்முறையினை தூண்டும் வகையில் காங்கிரஸ் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. ராமர் கோவில் விவகாரத்தில் காங்கிரஸ் வன்முறையினை தூண்டாமல், அமைதி காத்தால் நிச்சையம் ராமர் கோவில் கட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Union Minister Uma Bharti: If Congress supports us on #RamTemple then the path is open. The only obstruction in the construction of #RamTemple is Congress’ conspiracy, they are preparing to incite violence in the country. pic.twitter.com/reYydInXWw
— ANI (@ANI) December 6, 2018
ராமர் கோவில் விவகாரத்தில் கவணம் செலுத்த வேண்டியுள்ளதால், வரும் லோக்சபா தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என உமா பாரதி கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி அறிவித்திருந்தார். மேலும் பாஜக தலைவர் அமித்ஷா அனுமதிக்கு பின்னர் அதிகாரப்பூர்வமாக இந்த முடிவு அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி துவங்கி ஒன்றரை ஆண்டுகள் காங்கை யாத்திரை மேற்கொள்ளவிருக்கும் உமா பாரதி, இடைப்பட்ட காலங்களில் கங்கை கரையின் பகுதியில் தங்கி கங்கை நதியினை தூய்மை படுத்தவுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ராமர் கோவில் என்பது கட்சிகளுக்கு இடையேயான போராட்டம் இல்லை, மக்களின் உணர்வுகளுக்கு இடையேயான போராட்டம். இதனை மக்கள் உணரும் தருணத்தில் ராமர் கோவில் அமையும், அதர்கான வேலைகளிலேயே தான் ஈடுப்படபோவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.